எட்டிப்பிடிக்க முடியாத எதிர்பார்ப்புகள்
பகலில் பறக்கும்
மின்மினி பூச்சி
ஒளிர்ந்தும் வீணே
கண்மனி கண்களில்
படாமலேயே இன்னமும் நானே!
தன்னை அழகாக்கும் என்பதால்
தாமரையை சேர
நீர்தான் துடிக்கிறது
விண்ணைப் பிளந்து மழையாய்
தேடி வந்தாலும்
என்னை சேர என்ன
தகுதி என்று
தாமரையின் உறவான இலை கூட
ஒட்டாமல் மறுத்து தடுக்கிறது !
காக்கை கூட்டிலும்
குயிலின் முட்டை
பாதுகாப்பாய் வாழுமே
என்றும் உன்னை குயிலாய் நானும்
என்னை காகமாய் நீயும்
நினைத்தால் கூட போதுமே !
'காடுகள்' நிறைய
கட்டி ஆளும் சிங்கம்
மட்டும்தான் சிறந்ததா
கூடு கட்டியும்
குடும்பம் காக்கும்
மற்ற இனங்கள்
வீணாய் இங்கு பிறந்ததா ??