பாவலன் நான்…
• பாக்களோடு பூக்களும்
பாமாலை யாகிடவே
பாற்கடற் கடைந்திடும்
பாவலன் ஆனேனடி !
• பாதைகள் கடந்திடும்
பாதங்களை தேடினேன்!
பாதையோர புற்களும்
பூக்களென சிரிக்குதடி!
• நெற்கதிரோடு நானும்
நாற்றங்கால் பயிரானேன்!
நெற்றியோடு குங்குமம்
நற்றுந்தன் உயிராவேன்!
• மாட்டின்நடை நிலமதை
மாண்புற செய்யுமடி!
மெட்டியோலி ஓசையெனை
மேன்மையற செய்யுமடி!