உயிரின் உற்று
வேதனைகள் வேண்டுமடி !
தேவதையுன் மடி சாய…..
வேதங்களும் தோற்குமடி!
தேவதையுன் சொற்கேட்டு…
காலணிகளும் பாரமடி!
காத்திருக்கும் வேளையிலே…
காலனும் தூரமடி !
கைப்பிடித்த உன்னருகே…
சுழலுகின்ற மின்விசிறி
சுழற்றுதடி என்னினைவை…
சிலிர்க்கின்ற கண்விசிறி
சிந்தியவளை காணாது ….
அரியணை கோலங்கள்
அலங்கார தேர்தலிலே….
சரியணை கார்முகிலாய்
வருகின்ற வெண்ணிரவே…
வாடுகின்ற பயிரெல்லாம்
வானவளை தேடுதடி !
வாடிவிடும் உயிரெல்லாம்
வருடுகின்ற விரல் தேடுதடி !