SORNAVELU S- கருத்துகள்

திரும்பிய போதுதான், கடந்த பாதை
கல்லு முள்ளுன்னு தெரிஞ்சுச்சு; விரும்பிய வாழ்ந்த வாழ்க்கை தான்,
நல்ல முறையில போயிருச்சு.
நடந்ததெல்லாம் நல்லது தான்னு
நாலு தெசயிலும் சொல்றாங்க; படர்ந்த தெல்லாம் ஊழ் வினைன்னு,
பட்டறிவா விளக்கு றாங்க.
காலம் தந்த பாட மெல்லாம்,
மனசுலயே பதிந்து ருச்சு; ஆல விழுது போல உறுதியாக,
இருந்து விட்டா அதுவே நல்லதுவாம்.
2021 தீப ஒளியில் நான் மாத்திரமல்ல, நீங்களும் தான் வாழ வாழ்த்துக்கள், என, ஆனைக்குளம், சங். சொர்ணவேலு, கோவை.

தோல்வி என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வெற்றி வாய்ப்பை இழந்ததவன் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். (இரண்டு பேர் அல்லது குழு போட்டியிட்டால் ஒருவருக்கு கிடைப்பது வெற்றி
, எதிராளிக்கு கிடைப்பது தோல்வி என்கிறார்கள்). வெற்றி வாய்ப்பை இழந்தவன் மறுபடி முயற்சி செய்வான்.தோல்வி அடைந்தவன் சோர்ந்து போவான். எனவே தோல்வி என்ற வார்த்தையை பொருட்படுத்த தேவை இல்லை.

அ) வர்ணிக்க மற்றும் விமர்சிக்க:
ஆ)பொருளில் அறிவு, அழகு மற்றும் அளவு:
இ)வாசிப்புக்குப் பின் கருத்து மற்றும் சிந்தனை

குடும்பத்தில் எதிர் கால எதிர் பாரா செலவுகள் மற்றும் பிரச்சினைகள் வருவதை முன் கூட்டியே யூகித்து எச்சரிக்கையுடன் செயல்படும் புத்தியைக்கொண்டவள் பெண். ஆண் பல கட்டங்களில் அஜாக்கிரதையுடன் இருந்துவிடுவான். பின் வருவதை முன் தெரிந்து கொள்ளுதலைத் தான் பெண் புத்தி பின் புத்தி என்கிறார்கள்.

நன்றி திரு ஹனிபா அவர்களே, எழுதுகிறேன். எதிர்பாருங்கள்

ஞானப்பழம் சாப்பிட்டது போல் இருக்குங்க, கவிதை. பழங்கள் பழுக்கட்டும் தொடர்ச்சியாக!

அப்படி எனில் 'காளைப்'பொங்கல் என்று சொல்லலாம். சரியா?. வாழ்த்துக்கள்

அடேங்கப்பா ஒன்பது கெட்ட'தை'; மற்றும் பன்னிரண்டு நல்ல'தை' குறிப்பிட்டு சொல்லும் மன'தை' வாழ்த்த வார்த்'தை' இல்லை. எனினும் வாழ்த்துக்கள்.





'

வயலுக்கே சென்று நாமளே விவசாயம் செய்த மாதிரியான சூழலுக்கு கொண்டு போயிட்டீங்க ராம். கொண்டு போனதுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

நன்றி திரு ஹனிபா அவர்களே. எழுதுவதற்கு சிந்தனைகள், அனுபவங்கள், விசால பார்வைகள் நிறைய உள்ளன. ஆனால் இப்படி வடிவமைத்து எழுதத் தான் நேரமில்லை. முயற்சிக்கிறேன்.

பிறகு வளர்றது என்ன ! அதான் இப்பவே வளர்ந்திட்டங்கள்ள !!

சந்தோஷம். நன்றி தம்பி முகம்மது அவர்களே

பயணங்கள் முடிவதில்லை, தொடரும் (உடலன்றி)....

இதத்தான் பொழப்பு சிரிப்பா சிரிக்குது அப்புடிங்கிறதா !.....

இழப்பு தான், என்றாலும் தொலைக்காட்சி காமடி நிகழ்ச்சிகளில் இன்னும் வடிவேலு தான் கலக்கிக்கிட்டு இருக்கார்

நன்றி வேளாங்கண்ணி அவர்களே

இதை எப்படிப் பார்க்கிறீர்கள் ? பணிந்து பேசி விட்டுக் கொடுக்கிறவர்கள் என்ற சுபாவம் என்றே சொல்லிவிட்டீர்கள். அப்படி என்றால் ஏதாவது எதிர் பார்க்கிறாரா? அப்படி சுபாவம் உள்ள எவரும் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் தன் கடமையைச் செய்கிறார்கள். மரியாதை கொடுப்பதும் கொடுக்காததும் எதிரில் இருப்பவரது சௌரியம். மரியாதை தெரிந்தவர்கள் அதைத் தெரிவிப்பார்கள். மரியாதை தெரியாதவர்கள்.. தெரியாதவர்களிடம் எதிர்பார்ப்பது கூடாது..

கருத்தை அருமையுடன் தெரிவித்த அ. வேளாங்கண்ணி அவர்களுக்கு என் தாமதமான நன்றி


SORNAVELU S கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே