பொங்கல் திருநாள்

பொங்கல் திருநாள்

ஏர் எடுத்து கழனி செழிக்கப் பாடுபட்டு
களை எடுத்து புதுப்பயிரை வளமூட்டி
வியர்வை சிந்தி உழைத்து கதிர் வளர்த்து
கொத்தாக மணிகளைக் கொய்து பதறடித்து
அள்ளிச் சேர்த்து உமி நீக்கி நெல் உடைத்து
கொத்திப் புத்தரிசியாக்கிப் புழுங்கி எடுத்து
புதுப்பானைதனில் பொங்கவைத்து
பகலவனின் முகம்பார்த்து நன்றி தெரிவிக்க
பொங்கலோ பொங்கல் எனக் கூவி அழைத்து
புதுத்துணி அணிந்து உவகையுடன் கொண்டாடும்
இத்தமிழ் திருநாள் பொங்கல் என அறிவோமே !!

எழுதியவர் : கே என் ராம் (14-Jan-18, 6:06 pm)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : pongal thirunaal
பார்வை : 39

மேலே