எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்று ஏ .எம் .ராஜா பிறந்தநாள் ----------------------------------------------------------- “தேன்நிலவு”...

இன்று ஏ .எம் .ராஜா பிறந்தநாள்
-----------------------------------------------------------
“தேன்நிலவு” படத்தில் “காலையும் நீயே மாலையும் நீயே” பாடலை இப்போது கேட்டாலும் நாற்பது வயசு குறைந்து விடுகிறது. என்னைச் சுற்றி காதல் ததும்பி வழிகிறது .என் உடம்புக்குள் ஜெமினி புகுந்து கொள்கிறார் .எம் வீட்டு பூச்செடிகளிலெல்லாம் வைஜைந்திமாலா ஆடிக் கொண்டிருக்கிறார் ......ஒரு ஜிப்பா ,பைஜாமாவை போட்டுக் கொண்டு கைகளை விரித்துக் கொண்டு “காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன்” என்று பாடிக்கொண்டு வசந்தியை இழந்த சோகத்தில் ஓடுகிறேன்.”கண்களின் வார்த்தைகள் புரியாதோ ...காத்திருப்பேன் என்று தெரியாதோ “என்று பவானி சாகர் ,வைகை அணைக்கட்டுகளில் சாவித்திரியோடு ஓடிபிடித்து விளையாடுகிறேன். என் பின்னால் நிழல் போல் வருகிறார் ஏ .எம் .ராஜா.................திடீரென இன்னும் இளமையாகி “சிற்பி செதுக்காத பொற்சிலையே’ என்று சிவாஜி வருகிறார் என்னுள் ......”மயக்கும் மாலைப் பொழுதே நீ வா வா..இனிக்கும் இன்ப இரவே நீ வா “என்று எம்ஜிஆர் உள்ளே நுழைகிறார். ....ஏனோ என் நிழல் போல் தொடர்ந்த ராஜாவுக்கு உடன்பாடில்லை. ....மீண்டும் ஜெமினியை என்னுள் அனுப்பிவைக்கிறார் ........பல்லவன் கட்டிய சிற்பக் கோயில்களுக்கிடையே “பழகும் தமிழே பார்த்திபன் மகனே” என்று மீண்டும் வைஜைந்தியோடு ஆடிக்கொண்டே ஜெமினியும் ,நானும் ராஜாவும் காலவெளியில் பாடிக்கொண்டிருக்கிறோம் மரணமற்றப் பெரு வாழ்வில்..

(தொகுப்பு :கவிஞர் ஜெயதேவன்.. )

பதிவு : சிவநாதன்
நாள் : 1-Jul-15, 8:16 pm

மேலே