சிவநாதன்- கருத்துகள்

ஒரு நாட் பொழுதுக்குள் நடக்கும் சம்பவம் கூட ஒரு தேர்ந்த எழுத்தாளரின் திறமையினால் கதை போலச் சொல்லப்படலாம்.
உச்சி வெயில் ஒவ்வொரு வரிகளினூடாகவும் உஷ்ணப் பிரம்பெடுத்து கதையோட்டத்தை ஓட ஓட நகர்த்தி மழையில் முடித்து விட்டது.நல்ல நயம். அருமையான நடை ..வாழ்த்துக்கள்!!

"அகரமுதல எழுத்தெல்லாம்; ஆதி பகவன் முதற்றே உலகு " கவனிக்க ஆதி பகவான் அல்ல ஆதி பகவன் என்பதே சரி. இங்கு பகவன் என்பது முற்றும் துறந்த முனிவர் எனப் பொருள் படும்

ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு ஆகம விதி முறை இருக்கிறது அல்லவா? ஐயப்ப தரிசனம் புனிதமாக மேற்கொள்ள வேண்டியது என்பது எல்லோரும் அறிந்த உண்மை இதில் மாற்றுக் கருத்து இல்லை.. சைவப் பெண்கள் வீட்டிற்கு விலக்கு வந்தால் பூஜை அறைக்கே போவதில்லை பிறகு எப்படி சபரி மலைக்குப் போவது?? கோயிலின் புனிதம் கெட்டு விடும்..

அன்பு வேறு காதல் வேறு.. அன்பு இருக்கும் இடத்தில் காதல் இருக்க வேண்டியதில்லை.காதல் இருக்கும் இடத்தில் அன்பு இருக்க வேண்டும்.இதில் தெளிவாக இருந்தால் குழப்பம் இருக்காது..

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று சொல்வார்கள்.முன்பெல்லாம் அநேக குடும்பங்கள் கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்தன..அவ்வப்போது சிறு சிறு பிரச்சனைகள் வரத்தான் செய்யும். ஆனால் பெரிய அளவில் பாதிப்புக்கள் வராது. கூட்டுக்குடும்ப வாழ்வு எத்தனையோ விதத்தில் பயனுள்ளதாகவும், பலமாகவும், பலனாகவும் இருக்கிறது. கூட்டுக் குடும்மாய் வாழ்வதினால் கட்டுக்கோப்பான உறவு முறை பேணப்படுகிறது அத்துடன் நம் உடமைக்கும் பொருளுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இருக்கிறது.ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் காப்பாற்ற, உதவி செய்ய ஆள் இருந்தது. குழந்தைகளை பராமரித்து பாசம் காட்ட தாத்தா, பாட்டி மாமன் மாமி எனப் பலர் இருப்பார்கள். ஒரு காலம் வரை தமிழ்ச்சமுகம் மற்ற சமுகத்தை போல் சீரழியாமல் இருந்ததற்க்கு கூட்டுக் குடும்பம் ஒரு முக்கிய காரணம் எனலாம்

கூட்டு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் பெரும்பாலும் பாதிப்படைவது பெண்கள் எனும் கருத்து உண்டு மாமி மருமகள் நாத்தனார் முரண்பாடுகள் கூடிய கூட்டு குடும்ப சூழலோடு ஒத்துப் போய் வாழ்வதில் உள்ள சிரமங்களைக் காரணங் காட்டி அந்த சூழலை விட்டு வெளியேற விரும்பியதால் காலப்போக்கில் தனிக்கூடும்ப வாழ்க்கை முறை வலுப்பெற்றது .அது மட்டுமல்லாமல் மேற்கத்திய நாகரிகம், அறிவியல் வளர்ச்சி பொருளாதாரத் தேடல் போன்ற காரணிகளும் இங்கு செல்வாக்குச் செலுத்தின

.
கணவன் மனைவி இருவருமே நல்ல புரிந்துணர்வுடனும் , தங்கள் குடும்பத்தை நிர்வகிக்கும் திறன் கொண்டவர்களாகவும், இருக்கும் வரை எந்த தனிக்குடும்பத்திலும் பிரச்சனை ஏற்படுவதில்லை இந்தச் சவால்களையும் எதிர் கொண்டு அவர்களால் தங்கள் குடும்பத்தை நிர்வகித்து குழந்தைகளை நல்லபடி வளர்த்து சமுதாயத்தில் உயர் நிலை அடைய முடியும் .குடும்பங்களுக்குள் ஒற்றுமை இருக்கும் வரை, மனிதனுக்கு வாழ்க்கையில் கவலை இருப்பதில்லை.
வேலை வீடு குழந்தைகள் உறவுகள் என்று பர பரப்பாக வாழும் தனிக்குடும்பங்களின் மத்தியில் கணவன் மனைவிக்கு தமக்கென சிறிது நேரம் அன்பைப் பரிமாறிக் கொள்ள கிடைப்பது குறைவு இருந்தாலும் அவர்களது அர்ப்பணிப்பு கடமை உணர்வு குழந்தைகள் எதிர்காலம் கருதி எதையும் சமாளித்து தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் ..
வேலையில்லாமல் வீட்டில் இருக்கும் சில குடும்பப் பெண்கள் தனிமை என்ற காரணத்தை வைத்து சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவழிக்கின்றனர். இது படிப்படியாக குடும்பத்தையே நாசம் செய்யும் அளவிற்கு செல்கிறது.வீட்டில் சமையல் செய்து சாப்பிட அவர்களுக்கு நேரம் இல்லாது
பிரியாணிக்கடைக்கு ஆர்டர் செய்து சாப்பிடும் அளவிற்கு அவர்கள் வந்துவிட்டார்கள் ..இவர்களுக்கு குடும்பம் குழந்தை எதுவும் பெரிதாக கண்ணுக்குத் தெரிவதில்லை தங்கள் வழியில் செல்ல தடையாக இருப்பவர்களை கொல்லவும் துணிந்து விட்டார்கள் ..இவ்வாறான கேடு கேட்ட பெண்களால் தாய்க்குலத்திற்கே இழிவு. இப்படியான பெண்கள் கூட்டுக் கும்பத்தில் இருந்தால் இவர்களது கொலைப் பட்டியல் எவ்வாறு இருக்கும் எனக் கூறத்த தேவையில்லை மாமன் மாமி நாத்தனார் சகலை என்று நீண்டு கொண்டே போகும்.தனிக் குடும்பம் என்ற படியால் மற்றவர்கள் தப்பிக்க கொள்வார்கள் இவர்களது படுகொலைப் பட்டியலில் இருந்து..

வயசு போன காலத்துல எப்ப்பப் பார்த்தாலும் தொண தொண என்று பேசிட்டே இருக்காமல் இதையும் கொஞ்சம் வாசி என்று என் பெயரன்தான் கொண்டு வந்து சேர்த்து விட்டான்..அப்போது அதாவது 2012-2015அளவில் நல்ல படைப்பாளிகள் பலரின் சிறந்த ஆக்கங்கள் இத் தளத்தில் வெளியாகிக் கொண்டிருந்தன.இப்போது அந்த இல்லை இருந்தாலும் ஒரு சில மூத்த படைப்பாளிகள் இன்னமும் தங்கள் ஆக்கங்களை பதிவு செய்து கொண்டு இருக்கின்றனர் .இப்போது இளைய தலைமுறைப் படைப்பாளிகளை பார்க்க முடிகிறது என்றாலும் இவர்களின் எழுத்தின் வீச்சு இதற்கு முன்பிருந்தவர்களுடன் ஒப்பிடும் படியாக இல்லை என்பது வருந்தத் தக்கது

தங்கள் ஆதங்கம் நியாயமானது ..விவாதிக்கப்பட வேண்டிய விடயம்!! கேள்வி பதில் பகுதியில் பதிவு செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

கண்ணியம் என நான் இங்கு குறிப்பிட்டது ஒரு படைப்பாளி தான் எழுதும் போது கடைப்பிடிக்க வேண்டிய பண்பாடான சொற் பிரயோகங்களை ஐயா..
இயத்தை ஈயமாக நீட்டிக்கொள்கிறார்கள் உண்மைதான்....அது மட்டுமா ஆளாளுக்கு குழு அமைத்து அதற்கு ஒரு ஈய விகுதி வைத்து இந்த ஈயத்தை காய்ச்சி தமிழின் காதுக்குள் ஊற்றிக் கொண்டுமல்லவா இருக்கிறார்கள்!!

புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும்

உண்மையான காதல் என்றால் அது அர்த்தநாரீஸ்வரர் போல.

தமிழ் தனது இலக்கை மட்டும் இயம்பிச் செல்லட்டும் இலக்கியமாக இடையில் இந்த நடுநிலைமை எதற்கு? காலப்போக்கில் எத்தனையோ "இயம்" கள் உருவாகும் அத்தனையும் இலக்கியத்தால் உள்வாங்கிக் கொள்ள முடியுமா? பெண்ணியமோ ஆணியமோ எழுத்தில முதல் கண்ணியம் வேண்டும் ..எழுத்தில் ஏதோ புரட்சி செய்கிறோம் என்று சில பெண்ணியக் கவிஞர்கள் எழுதுவது சகிக்கும்படி இல்லை..

மெல்லிசை மன்னர் இசை அமைத்த பாடல்கள் சொல்லிக்கொண்டே போகலாம் அத்தனையும் காலத்தால் அழியாத முத்துக்கள். செவியில் தேன் போல இன்னமும் இனிமை சேர்த்துக் கொண்டே இருப்பவை..
1 . msv இன் இசை கேட்டால் செடி கொடிகள் மட்டுமா இந்தப் பிரபஞ்சமே அசைந்தாடும்... ஏழாம் கடலும் வானும் நிலவும் ஒன்றாய் கலந்து உறவாட வைக்கும் அந்த இசையை உருவாக்கும் திறமை மெல்லிசை மன்னருக்கே.."இசை கேட்டால் புவி அசைந்தாடும் "
2 .காலங்களில் வசந்த காலம் யாருக்குத்தான் பிடிக்காது..கலைகளில் ஓவியமாய் வாழ்க்கை அமையும் போது மவுத் ஆர்கனோடு ஆரம்பிக்கும் இந்தப்பாடல் புல்லாங்குழல்களிடம் சேரும் போது அழகோ அழகு "காலங்களில் அவள் வசந்தம்"

3 .சந்திப்பு வருவது கண்டு,பலர் சந்திக்கும் இடங்களும் உண்டு,அவர் சொந்தங்கள் ஆவதும் உண்டு.அது தொடர்கதையாவதும் உண்டு.......
இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே இவரை எவர் வெல்லுவாரோ என இந்த பயணத்தை மக்கள் மனதில் உறையும் படி பாடி வைக்கிறார் msv "பயணம் பயணம் "
4 . உணர்வுகளை வெளிப்படுத்தும் அற்ப்புத இசை...வாயிருந்தும் சொல்வதற்கு
வார்த்தை இன்றி தவிக்கிறேன் ..."சொல்லத்தான் நினைக்கிறேன்......"
5 . செவிகளில் இன்னமும் சாரலாக இந்த கோடைகாலத்து வான்மழை.. நிலவில் ஒளி விடும் மாணிக்கமாய் ஒளி மங்காத இசை "அவள் ஒரு நவரச நாடகம் "
6 .இசையும் எனக்கிசையும் தினம் என் மனம் தானத்தில் அசையும் ..ஆம் கவிதையும் இசையும் உச்சம் தொட்ட பாடல் இது. கவிதை என்ற ஞான விளக்கில் திரியாய் மெல்லிசை மன்னரின் இனிமையான இசையை வாணி ஜெய்ராம் ஏற்றி வைக்கிறார் அருமையான பாடல் "நாதமெனும் கோவிலிலே "









அய்யயோ அடியேன் நான் புலவனல்லன் நண்பரே ..உங்கள் கவிதை களை கட்டுகிறது என்று சொல்லவந்தேன் ..புரிதலுக்கு நன்றி

சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்பது மருவி சோழியன் குடுமி சும்மா ஆடாது என வந்துவிட்டது ..அருமையான விளக்கம்.. நன்றி!!


சிவநாதன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே