KADAYANALLURAN - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  KADAYANALLURAN
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  11-Sep-2017
பார்த்தவர்கள்:  60
புள்ளி:  0

என் படைப்புகள்
KADAYANALLURAN செய்திகள்
KADAYANALLURAN - எண்ணம் (public)
04-Jan-2019 9:05 pm
KADAYANALLURAN - எண்ணம் (public)
04-Jan-2019 8:59 pm


  ‘சொல்லின் செல்வன்’  


" சுருக்"சொல், அருமை அடக்கம், இங்கிதத்தின் இலக்கணம் : அஞ்சனை மைந்தன்.     ‘சொல்லின் செல்வன்’ என்று ஸ்ரீ அனுமனுக்கு ஒரு  பெயர் உண்டு..  சொல்லக் கூடிய சொல்லை யோசித்து, புதிர் போடாமல்  எதைச் சொன்னால் எதிரில் இருப்பவர் எகிரி மகிழ்வார்களோ, அதைப் பகர்பவன்தான் நிகரற்ற புத்திசாலி. 


ஸ்ரீ ராமபிரான் தனது ஜானகியைத்  தேடச் சொல்லி அனுமனைத் தூது  அனுப்பியது தெரிந்த சங்கதி.  அனுமன் வான் வழியாக  "விர் " என்று  பறந்து சென்று அசோக வனத்தில் இருந்த சீதாதேவி யைக் காண்கிறார். அசோகவனம் என்று பெயர்தான். ஆனால்,   சோகவனம்  என்று சொல்லும் அளவுக்கு, தேவி  சோகத்தோடு அமர்ந்திருந்தாள்.   

ஸ்ரீராமபிரானைப் பற்றி சீதையிடம் கூறிவிட்டு மீண்டும் ராமனிடம் வருகிறார்.  “சீதா தேவி  எங்கிருக்கிறாள்? எப்படியிருக்கிறாள்? ’ என்றெல்லாம் குழப்பத்தில் இருந்தார் ஸ்ரீ ராமபிரான்.   ஸ்ரீ ஆஞ்சநேயரைப் பார்க்கிறார்.  அனுமன் மூன்றே வார்த்தையில் அவரது குழப்பத்தையும், சந்தேகத்தையும் தீர்க்கிறார்.  ‘கண்டேன் அந்த கற்பினுக்கனியை’ என்பதுதான் அவர் சொன்ன சொற்கள். . அதாவது, ‘சீதையைப் பார்த்தேன்.. அவள் களங்கமில்லாமல்  கற்போடு இருக்கிறாள்’,  என்ற பொருளில் அனுமன் கூறுவதை ஸ்ரீ ராமாயணம்  வர்ணிக்கிறது. அதனால் தான் அனுமன் ‘சொல்லின் செல்வன்’ என்ற பெயர் பெற்றார்.

அதேபோல் ராவணனிடம் அனுமன் பேசும்போதும்,   "ஞானிகளும் விரும்பும் சிறப்புக்களை பெற்றவனே!  '" 'ஆதலால், தன் அரும் பெறல்  செல்வமும், ஓது  பல் கிளையும், உயிரும் பெற,  சீதையைத் தருக" என்று எனச் செப்பினான், சோதியான்  மகன் நிற்கு ' எனச் சொல்லினான். தான் பெறுவதற்கு மிக அறியதாகப்  பெற்ற செல்வத்தையும், சுற்றத்தாரையும், ஏன் தனது  உயிரையும் காப்பாற் றிக்கொள்ள  விரும்பினால், , சீதையை விட்டு விடுவாயாக  என்று சோதியான் மகன் உனக்குச் சொல்லி அனுப்பியிருக்கிறான். = அனுமன். 

சோதியான்  என்றால் ஜோதியே வடிவானவன் -  சூரியன்.  சூரியனின் மகனான சுக்ரீவன்.   ' சீதையை விட்டு விடுக  என்று சுக்ரீவன் சொல்லி அனுப்பி  இருக்கிறான்.  உடனே அவளை விட்டு விடுக, " என்கிறான் அனுமன். 

இப்போது கூறுங்கள், அனுமனின் தோற்றம், ஆற்றல், பணிவு, வாக்கு சாதுர்யம் போன்றவற்றை முதன் முதல் பார்த்த மாத்திரத்தில் இவன்தான் சொல்லின் செல்வன் என்று ஸ்ரீ ராம பிரான் நினைத்ததற்கு பிறிதொரு கருத்து உண்டோ ?   

==  கடையநல்லூரான்                  

மேலும்

KADAYANALLURAN - எண்ணம் (public)
13-Nov-2018 3:40 pm

வீரர்கள் தினம்  


நவம்பர் 11  அமெரிக்கர்கள் வீரர்கள் தினம் என்று கொண்டாடுகிறார்கள்.  அந்நாட்டைக் காக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட வீரர்களின் தேசபக்தி மற்றும் அவர்களது சீரிய பணிகளை பாராட்டவும், அவர்களுக்கு  நன்றி  தெரிவிக்கும் முகமாக இந்நாளை அமெரிக்கர்கள் கொண்டாடுகிறார்கள். தெநாங்கில் ஆசிய பசிபிக் பொருளாதார  கூட்டுறவு  கூட்டத்துக்கு  சென்றிருக்கும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் அவர்கள் அங்குள்ள அமெரிக்கா விண்தளத்தில் வியட்நாம் போரில் ஈடுபட்டிருந்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டார்.   முதற் உலகப் போர் முடிந்த தருவாயில் போர் நிறுத்த ஒப்பந்தம்  ஒன்று கையெழுத்தாகியது.   1926ஆம் நடந்த காங்கிரஸில் வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், உலக நாடுகளிடையே அமைதியுறவை மேம்படுத்தவும் தீர்மானம் போட்டனர். அதுவே போர் நிறுத்த  தினம் என்றாகியது. பின்னாளில், இது வீரர்கள் தினம் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக, போர் இருந்ததோ, அல்லது அமைதியான கால கட்டங்களில் பணி  புரிந்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாய் அமைகிறது வீரர்கள் தினம். .    இந்தியாவில், ராணுவ தினத்தை (ஜனவரி15) ஒட்டியே வீரர்கள்தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியா, கனடா நாடுகள் நவம்பர் 11 நாளை ஞாபகார்த்த நாள் என்றும், கிரேட் பிரிட்டன் நவம்பர் ஒன்றாம்  நாளை ஒட்டிய ஞாயிற்றுக்கிழமையை ஞாபகார்த்த தினம் என்றும் கொண்டாடுகின்றன.   

:::  கடையநல்லூரான்

   

மேலும்

KADAYANALLURAN - எண்ணம் (public)
17-Sep-2018 8:04 pm


சமூக ஒற்றுமையை வளர்க்கும் கணேஷ் சதுர்த்தி போன்ற விழாக்கள்:  : 

 2018    ஆண்டுக்கான  விநாயக சதுர்த்தி விழா எப்போதும்போலவே கோலாகலத்துடன் நிறைவடைந்தது. அன்று திலகர் (பாலா கங்காதரர் ) காலத்தில் சமூக அக்கறையுடன் போடப்பட்ட பிள்ளையார் சுழி விழா படிப்படியாக பெரிதளவில் கொண்டாடப்பட்டு இன்று உலக அளவில் முழுமுதற்கடவுளுக்கு பக்தி சிரத்தையுடனும் பரவசத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது கணேஷ் சதுர்த்தி .  

பாரதத்தின் பற்பல மூலை முடுக்குகளில் பரந்தோங்கி விரிந்திருக்கும் காலனிகள் , தெருக்களில் விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்கள் கொண்டாடப்படும் நாட்களில் 

1 .   அது வரை அறிமுகம் இல்லாத / அறிமுகம் காட்ட மறந்த பலரும் ஒன்று கூடி கொண்டாடாடுவது  ஒருவருக்கொருவர் புதிய அறிமுகம், அதனை தொடர்ந்து சமூக, கலாச்சார உறவுகளை வளர்த்து கொள்வது, சுக துக்கங்களை பகிர்ந்தளித்துக் கொள்வது போன்றவற்றிக்கு சாத்தியமாகிறது. 

2. இது போன்ற விழா நாட்களில் சிறு சிறு பேட்டி கடைகள், பெரிய கடைகள், பூ விற்பவர்கள், மண், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற பொருட்களினால் பிள்ளையார் சிலை தயாரிப்போர், பழ வியாபாரிகள் ஆகிய பலதரப்பட்ட வியாபாரிகள் பலருக்கும் வியாபாரம் பெறுக வழி வகை செய்தாக ஆகிறது. 

3  சிறார்கள்   ஒன்றிணைந்து விழாவை கொண்டாடுவதால் குடும்ப உறவுகள் மேம்படுகிறது, பக்கத்து வீடுகள், தெருவில் உள்ள இதர வீடுகளில் வசிக்கும் பலருடன் நட்புறவு பெறுக அடித்தளம் போட வாய்ப்பு. 

4  விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க செல்லும் நாட்களில், கடலில் கரைக்க உதவும் சிறுவர்கள் சிறிதளவாவது பணம் ஈட்டவும் , புகைப்படக்காரர்கள் போட்டோக்கள் எடுத்து அதன் மூலம் வருமானம் ஈட்டவும், ரொம்ப அபூர்வமாக அவருக்கு அணிவித்த மிக சிறிய தங்க தோடுகள் போன்றவற்றை  விநாயகர் சிலை கரைக்குமிடத்தில் தர்மம் செய்யும் சிலர் மூலம் சிலர் உதவி பெறவும் தருணமாகவும் அமைகிறது இவ் விழா  நடத்தல் அம்சங்கள். 

:  கடையநல்லூரான் 
 
<p>Indian devotees immerse an idol of the elephant-headed Hindu god Ganesh in the Indian ocean at Pattinapakkam beach in Chennai on September 16, 2018, as part of Ganesh Chaturthi festival. (Photo by ARUN SANKAR/AFP/Getty Images) </p>

மேலும்

KADAYANALLURAN - துறைவன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
03-Aug-2018 7:28 pm

உழைப்பாளி தம்பதிகள்

மேலும்

KADAYANALLURAN - KADAYANALLURAN அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-May-2018 8:27 pm

 

தத்தாத்ரேயர் ஜெயந்தி தினம் இன்று 


     ஸ்ரீபிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் அம்சமாக திகழும் தத்தாத்ரேயர் அவதரித்த நாள். 

      கலியுகத்தில் மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காகவே மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து ஆச்சார்ய வடிவாக வந்ததே ஸ்ரீ தத்தாத்ரேய ஸ்வரூபம். பல தெய்வங்களை வழிபட்டாலும் எல்லா தெய்வங்களும் அந்த பரபிரம்ம வடிவமே என்கின்றன ஞானநூல்கள். 

      படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலை நடத்தும் மும்மூர்த்திகளும் பரப்பிரம்மத்தின் மூன்று முகங்களே. இந்த கருத்தைச் சொல்ல வந்ததுதான் ஸ்ரீதத்தாத்ரேய அவதாரம். மற்ற எல்லா அவதாரங்களுக்கும் ஆரம்பம், முடிவு உண்டு. ஆனால் இந்த அவதாரத்திற்கு முடிவு கிடையாது. ஏனெனில் அனுமனைப்போல, மார்க்கண்டேயனைப் போல தத்தாத்ரேயரும் நித்ய சிரஞ்ஜீவியாக போற்றப்படுகிறார்.

       கற்பின் மேன்மை அத்திரி மகரிஷியும், அவரது மனைவி அனுசுயாவும் காட்டில் வசித்தனர். கணவருக்கு பணிவிடை செய்வது மட்டுமே அனுசுயாவின் பணி. விருப்பம். குழந்தை இல்லாத அவள், தனக்கு மும்மூர்த்திகளே தெய்வக் குழந்தைகளாக பிறக்க வேண்டுமென விரும்பினாள். இதை அறிந்த மும்மூர்த்திகளும் தங்கள் தேவியரிடம் ஆலோசனை கேட்டனர். அனுசுயாவிற்கு சோதனை வைத்து, அதில் வெற்றி பெற்றால், அவளுக்குக் குழந்தையாகப் பிறக்கலாம் என தேவியர்கள் மூவரும் சொன்னார்கள்.  எப்படியும் இதில், அவள் தோற்று விடுவாள் என்பது அவர்களது கணிப்பு. அதன்படி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் துறவி வடிவில் அனுசுயாவின் குடிசைக்கு வந்து உணவிடும்படி யாசகம் கேட்டனர். அவள் உணவுடன் வரும் போது, “பெண்ணே... நீ நிர்வாணமான நிலையில் உணவிட்டால் தான் அதை ஏற்போம்“, என்றனர். அனுசுயா கலங்கவில்லை. அவளுக்கு தன் கற்பின் மீதும், பதிவிரதை எனும் குணத்தின் மீதும் அதீத நம்பிக்கை உண்டு.  கணவருக்கு பாத பூஜை செய்த தீர்த்தத்தை எடுத்து, ‘நான், என் கணவருக்கு செய்யும் பணிவிடை சத்தியம் எனில், , இந்த துறவிகள் குழந்தைகளாகட்டும்’ எனச் சொல்லி, அவர்கள் மேல் தெளித்தாள். உடனே மூன்று தெய்வங்களும் குழந்தைகளானார்கள். தனக்கு பால் சுரக்கட்டும் என அடுத்த வேண்டுகோளை வைத்தாள் அனுசுயா. நிர்வாண நிலையில், குழந்தைகளுக்கு பாலூட்டினாள். வெளியே சென்றிருந்த அத்திரி முனிவர், தன் ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்தார். வீட்டுக்கு வந்த அவர், அந்தக் குழந்தைகளை ஒரு சேர அணைத்தார். ஒரு உடல், மூன்று தலை, இரண்டு கால்கள், ஆறு கைகளுடன் குழந்தை இணைந்தது. அதற்கு தத்தாத்ரேயர் என்று பெயரிட்டார்.   

     தங்கள் கணவன்மார்களுக்கு ஏற்பட்ட கதியை அறிந்த முப்பெருந்தேவியரும், அனுசுயாவின் குடிலுக்கு வந்தனர். நடந்ததைக் கூறி, தங்கள் கணவன்மார்களை சுயவடிவில் திருப்பித் தர கேட்டனர். அவர்களிடம், உங்கள் கணவன்மார் உங்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டும் என்பது போல், குழந்தையில்லாத எங்களுக்கு இந்தக் குழந்தையும் வேண்டும் என்றார் அத்திரி மகரிஷி.  உடனே, மூன்று தெய்வங்களும் எழுந்தனர். ரிஷியே... உங்கள் விருப்பப்படி இந்தக் குழந்தை இங்கேயே இருக்கும். இவன் பெரிய ரிஷியாக விளங்குவான் என்று கூறி மறைந்தனர். 

     இவரது பிறிதொரு பெயர் ஆத்ரேயர், (அதாவது அத்த்ரியின் புதல்வர்). ஆகவே தத்தாத்ரேயர் என்று இரண்டும் சேர்த்து அழைக்கப்படுகிறார்!

      தத்தாத்ரேயர் அவதாரம் நடந்த தலம் சுசீந்திரம் என்று கூறப்படுகிறது. தாணுமாலயனாக இங்கே இறைவன் இருக்கிறார். உத்திரப்பிரதேசத்தில் குரு மூர்த்தி என்றாலேயே அது தத்தரைக் குறிக்கிறது. பிரயாகையில் இவரது கோயில் அமைந்துள்ளது. கர்நாடகாவில் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் தத்த ஜெயந்தி என கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சென்னை, வேளச்சேரியில் தத்தாத்ரேயர் கோவில் அமைந்துள்ளது. தத்தாத்ரேயர் பிரதானமாக விளங்குவது இவ்வாலயத்தில் மட்டுமே. பக்தர்கள் கேட்டதைக் கொடுக்கும் ஜகன்மாதா மஹாலஷ்மி அனகாதேவியாக அவருடன் உறைகிறார். மார்கழி மாதத்தில் வரும் அஷ்டமி நாளன்று பிரதான அனகாஷ்மமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அஷ்டமா சித்திகளையும் பிள்ளைகளாகப் பெற்ற அனகா தத்தரை வழிபடுவதே அனகாஷ்டமி விரதமாகும். சகல சௌபாக்கியங்களையும் அளிக்கக்கூடியது இந்த விரதம் பிரதி மாதம் ஆசிரம ஆலயத்தில் நடத்தப்படுகிறது. ஸ்ரீதத்தாத்ரேயரை நினைத்தாலே நம் பாவங்கள் அனைத்தும் விலகி விடும் என்கின்றனர்  பக்தர்கள் . இவரை  முறையாக  உபாஸித்து வணங்கித் தொழுதால், ஞானமும் யோகமும் கைகூடும் மனோதிடமும் பெருகும் என்பது நம்பிக்கை. தத்தாத்ரேயர் ஜெயந்தியான இன்று  தத்தாத்ரேயரை வழிபட்டு நலன்கள் பல பெறுவோம்.    

 ==கடையநல்லூரான்      

மேலும்

தத்தாத்ரேயரின் கதை சொல்லும் சிறப்பான பதிவு . குருவின் திருவடி சரணம் . வாழ்த்துக்கள். 11-May-2018 8:24 am
KADAYANALLURAN - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Apr-2018 10:43 pm

அனைவருக்கும் வணக்கம் 

எட்டடுக்கு மாளிகையில் எந்த அடுக்கில் விரிசல் விழுந்தாலும் ,அந்தந்த அடுக்கில் விழுந்த விரிசலாகக் கருதக்கூடாது .அடித்தளத்தின் பலவீனம் என்றுதான் கருதவேண்டும் அதுபோல அதிகார வர்க்கம் ,நீதித்துறை ,ஆளும் வர்க்கம் என்ற அடுக்கில் எந்த அடுக்கில் விரிசல் தென்பட்டாலும் ,அது அடித்தளமாகிய வாக்காளர் பலவீனம் எனக் கருத வேண்டும் 
மகா கவி பாரதியார் ,  "வருந் துன்பம் தவிர்க்கும்  அமைச்சர்கள் மிக நன்னலம் கொண்ட   குடிப்படை "   என்பது பாரதி வடித்துக் கொடுத்த மக்களாட்சிக்குரிய  அர்த்தசாஸ்த்திரம் .அது என்று வருமோ ?எப்போ வருமோ ?

திரு .தி.இராச கோபாலன் கருத்துக்கள் 

மேலும்

வணக்கம் கடையநல்லூரானே ! கணினி பயன்பாட்டில் புது யுகம் காணும் தங்கள் படைப்புகள் அனைத்தும் இன்று என் நாட்குறிப்பில் பதிவு செய்து விட்டேன் தங்கள் அனைத்து படைப்புகள் தொகுப்பாக நம் ஊர் பொதுநூலகத்தில் பார்வைக்கு வைக்க திரு நாகராஜன் நூலகரை நாடவும் தங்கள் போற்றுதற்குரிய படைப்புகளுக்கு பாராட்டுக்கள் நேரில் தொடர்பு கொள்ள கடையநல்லூர் வேலாயுதம் ஆவுடையப்பன் சிந்தாமதார் பள்ளிவாசல் தெரு உலகா பள்ளி அருகில் முத்துகிருஷ்ணாபுரம் கடையநல்லூர் 627751 ----------------------------- வீட்டு தொலைபேசி 04633 240658அலைபேசி 9444286812 28-Aug-2018 5:09 am
அஸ்திவாரம் ஸ்திரமாயின், சரித்திர பக்கங்களில் புகழ் உரம் போடப்பட்டுக்கொண்டே இருக்கும் . படிப்போருக்கு கிடைக்கப் போவதோ அறுசுவை மிகு நல்ல கருத்துக்கள். 19-Apr-2018 11:37 pm
KADAYANALLURAN - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
19-Apr-2018 10:43 pm

அனைவருக்கும் வணக்கம் 

எட்டடுக்கு மாளிகையில் எந்த அடுக்கில் விரிசல் விழுந்தாலும் ,அந்தந்த அடுக்கில் விழுந்த விரிசலாகக் கருதக்கூடாது .அடித்தளத்தின் பலவீனம் என்றுதான் கருதவேண்டும் அதுபோல அதிகார வர்க்கம் ,நீதித்துறை ,ஆளும் வர்க்கம் என்ற அடுக்கில் எந்த அடுக்கில் விரிசல் தென்பட்டாலும் ,அது அடித்தளமாகிய வாக்காளர் பலவீனம் எனக் கருத வேண்டும் 
மகா கவி பாரதியார் ,  "வருந் துன்பம் தவிர்க்கும்  அமைச்சர்கள் மிக நன்னலம் கொண்ட   குடிப்படை "   என்பது பாரதி வடித்துக் கொடுத்த மக்களாட்சிக்குரிய  அர்த்தசாஸ்த்திரம் .அது என்று வருமோ ?எப்போ வருமோ ?

திரு .தி.இராச கோபாலன் கருத்துக்கள் 

மேலும்

வணக்கம் கடையநல்லூரானே ! கணினி பயன்பாட்டில் புது யுகம் காணும் தங்கள் படைப்புகள் அனைத்தும் இன்று என் நாட்குறிப்பில் பதிவு செய்து விட்டேன் தங்கள் அனைத்து படைப்புகள் தொகுப்பாக நம் ஊர் பொதுநூலகத்தில் பார்வைக்கு வைக்க திரு நாகராஜன் நூலகரை நாடவும் தங்கள் போற்றுதற்குரிய படைப்புகளுக்கு பாராட்டுக்கள் நேரில் தொடர்பு கொள்ள கடையநல்லூர் வேலாயுதம் ஆவுடையப்பன் சிந்தாமதார் பள்ளிவாசல் தெரு உலகா பள்ளி அருகில் முத்துகிருஷ்ணாபுரம் கடையநல்லூர் 627751 ----------------------------- வீட்டு தொலைபேசி 04633 240658அலைபேசி 9444286812 28-Aug-2018 5:09 am
அஸ்திவாரம் ஸ்திரமாயின், சரித்திர பக்கங்களில் புகழ் உரம் போடப்பட்டுக்கொண்டே இருக்கும் . படிப்போருக்கு கிடைக்கப் போவதோ அறுசுவை மிகு நல்ல கருத்துக்கள். 19-Apr-2018 11:37 pm
KADAYANALLURAN - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
18-Sep-2017 12:33 pm

எண்ணம் காணொளி போட்டி

தோழர்களுக்கு வணக்கம்!
எழுத்து நடத்தும் எண்ணம் காணொளி போட்டி
தொடங்கும் நாள் - 18-09-2017
முடியும் நாள் - 27-09-2017


தோழர்களின் விருப்பப்படி போட்டி இறுதி நாள் 27 வரை நீடிக்கப் பட்டுள்ளது.

விதிமுறைகள்:
  • சமர்ப்பிக்கபடும் காணொளி உங்களது சொந்த காணொளியாக மட்டுமே இருத்தல் வேண்டும்.
  • காணொளி ஏதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாம். கவிதை மட்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்பது இல்லை. தாங்கள் எடுத்த குறும்படம். நண்பர்களுடன் மகிழ்ந்த காட்சிகள், செல்ல பிராணிகளின் சேட்டை என்று எதையும் தாங்கள் சமர்ப்பிக்கலாம் .
  • ஒரு நிமிட காணொளி மட்டுமே சமர்ப்பித்தல் வேண்டும்.
  • சிறந்த காணொளி ஒன்றிற்கு ஒரு சிறப்பு பரிசு வழங்கப்படும்.

காணொளி சமர்ப்பிக்க:
  • எழுத்து எண்ணத்தில் உங்களது காணொளியை சமர்ப்பிக்க நீங்கள் உங்களது youtube பக்கத்திற்கு சென்று share பட்டன் கிளிக் செய்யவும்.
  • பிறகு Embed என்பதை கிளிக் செய்து. உங்கள் காணொளி கோடை காபி செய்யவும்.
  • அதன் பின், எண்ணம் பகுதிக்கு வந்து video icon கிளிக் செய்து கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் காபி செய்த கோடை paste செய்யவும்.
  • Add வீடியோ என்பதை கிளிக் செய்தால் உங்கள் காணொளி எண்ணத்தில் சேர்ந்துவிடும்.
  • உங்களது கானொலிக்கேற்ப தலைப்பு கொடுத்து எண்ணத்தை அனைவரும் பார்க்கும் படி பதிவு செய்யவும்.

இப்படிக்கு,
எழுத்து குழுமம்

மேலும்

நிச்சயம் நீட்டிக்கப்படும் 21-Sep-2017 3:42 pm
போட்டி நடைபெறும் காலத்தையும் கொஞ்சம் நீடிக்கலாமே! இதுவரை போட்டியின் விதிமுறைகளை தழுவி வெறுமனே மூன்று காணொளிகள் மட்டுமே பதிவாகி இருக்கிறது. 21-Sep-2017 11:40 am
மன்னிக்கவும் தோழரே! கண்டிப்பாக இன்று பிழை திருத்தும் செய்து அனைவரும் பதிவிடும் பாடி மாற்றி அறிவிக்கப்படும். 21-Sep-2017 10:53 am
மாற்றத்தை தான் எதிர்பார்க்கிறோம் ஆனால் எங்கும் எப்போதும் ஏமாற்றம் தான் அடைகிறோம். கடந்த காலத்தை நினைக்கும் போது நிகழ்காலத்தில் அவைகளை மீட்க முடியாது என்பதே உண்மை. இனி இருக்கின்ற சூழ்நிலையில் ஓர் ஆரோக்கியமான சூழ்நிலை இங்கு உருவாகுமா என்று என்னை போல் பலருக்கு சந்தேகம் இருக்கிறது. ஆனால் தனித்துவமான எண்ணங்களும் கட்டமைப்பும் இங்கு தான் இருக்கிறது என்பது தனித்துவமான அடையாளம். சுயமாக படைப்பாளிகள் செயற்படும் சுதந்திரம் எமது தளத்தில் தான் இருக்கிறது. நல்ல கவிதைகள் வறண்ட நிலம் போல ஆகக் கூடாது அவைகள் அருவிகள் போல் என்றும் பலரின் உள்ளங்களில் நீந்திக்கொண்ட இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். சுயநலம் என்று பலரும் நினைக்கலாம் ஆனால் என்னை புரிந்த ஒரு சிலர் நிச்சயம் அதனை வெறுப்பார்கள் என்பதே என் நம்பிக்கை. 21-Sep-2017 10:30 am
KADAYANALLURAN - அன்பரசு அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Dec-2017 12:52 pm

எனது மகளுக்கு நிரல்யா என பெயர் சூட்ட விரும்புகிறேன்.நிரல்யா என்ற பெயருக்கு விளக்கம் தேவை.

மேலும்

ஒழுங்கான என்று அர்த்தம் . 18-Dec-2017 3:58 pm
சரியாக, ஒழுங்காக என்பது. . குழந்தையின் நக்ஷத்த்ரம் ? 16-Dec-2017 8:31 pm
நிரல்யா – Niralya – நிரல் means orderly or பேரபிக்ட் https : // puretamilbabynames.wordpress. com/pure-tamil-baby-names-for-girls/ 14-Dec-2017 2:05 pm
ஒரு வழியாகக் கண்டுபிடிச்சாச்சு! Niralya = Orderly , Perfect ! 13-Dec-2017 12:46 am
KADAYANALLURAN - ராஜ்குமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Dec-2017 11:24 am

வசன கவிதை என்றால் என்ன

மேலும்

சனங்க மனசு எனும் பூமில நச்சுனு முத பதியம் போல பதியணும்; அவ்விதையே வசன கவிதை 16-Dec-2017 8:24 pm
அதிலேயே அர்த்தம் இருக்கிறதே! சுட்ட தோசை என்பதில் உள்ளது போல. உதாரணத்திற்குப் பாரதியின் வசன கவிதைகளைப் படித்துப் பாருங்கள். 15-Dec-2017 9:07 pm
யாப்பு விதிகளை மீறிய கவிதைகள் யாவும் வசனக் கவிதைகளே 15-Dec-2017 8:09 pm
மேலும்...
கருத்துகள்

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே