எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

‘சொல்லின் செல்வன்’ " சுருக்"சொல், அருமை அடக்கம், இங்கிதத்தின்...


  ‘சொல்லின் செல்வன்’  


" சுருக்"சொல், அருமை அடக்கம், இங்கிதத்தின் இலக்கணம் : அஞ்சனை மைந்தன்.     ‘சொல்லின் செல்வன்’ என்று ஸ்ரீ அனுமனுக்கு ஒரு  பெயர் உண்டு..  சொல்லக் கூடிய சொல்லை யோசித்து, புதிர் போடாமல்  எதைச் சொன்னால் எதிரில் இருப்பவர் எகிரி மகிழ்வார்களோ, அதைப் பகர்பவன்தான் நிகரற்ற புத்திசாலி. 


ஸ்ரீ ராமபிரான் தனது ஜானகியைத்  தேடச் சொல்லி அனுமனைத் தூது  அனுப்பியது தெரிந்த சங்கதி.  அனுமன் வான் வழியாக  "விர் " என்று  பறந்து சென்று அசோக வனத்தில் இருந்த சீதாதேவி யைக் காண்கிறார். அசோகவனம் என்று பெயர்தான். ஆனால்,   சோகவனம்  என்று சொல்லும் அளவுக்கு, தேவி  சோகத்தோடு அமர்ந்திருந்தாள்.   

ஸ்ரீராமபிரானைப் பற்றி சீதையிடம் கூறிவிட்டு மீண்டும் ராமனிடம் வருகிறார்.  “சீதா தேவி  எங்கிருக்கிறாள்? எப்படியிருக்கிறாள்? ’ என்றெல்லாம் குழப்பத்தில் இருந்தார் ஸ்ரீ ராமபிரான்.   ஸ்ரீ ஆஞ்சநேயரைப் பார்க்கிறார்.  அனுமன் மூன்றே வார்த்தையில் அவரது குழப்பத்தையும், சந்தேகத்தையும் தீர்க்கிறார்.  ‘கண்டேன் அந்த கற்பினுக்கனியை’ என்பதுதான் அவர் சொன்ன சொற்கள். . அதாவது, ‘சீதையைப் பார்த்தேன்.. அவள் களங்கமில்லாமல்  கற்போடு இருக்கிறாள்’,  என்ற பொருளில் அனுமன் கூறுவதை ஸ்ரீ ராமாயணம்  வர்ணிக்கிறது. அதனால் தான் அனுமன் ‘சொல்லின் செல்வன்’ என்ற பெயர் பெற்றார்.

அதேபோல் ராவணனிடம் அனுமன் பேசும்போதும்,   "ஞானிகளும் விரும்பும் சிறப்புக்களை பெற்றவனே!  '" 'ஆதலால், தன் அரும் பெறல்  செல்வமும், ஓது  பல் கிளையும், உயிரும் பெற,  சீதையைத் தருக" என்று எனச் செப்பினான், சோதியான்  மகன் நிற்கு ' எனச் சொல்லினான். தான் பெறுவதற்கு மிக அறியதாகப்  பெற்ற செல்வத்தையும், சுற்றத்தாரையும், ஏன் தனது  உயிரையும் காப்பாற் றிக்கொள்ள  விரும்பினால், , சீதையை விட்டு விடுவாயாக  என்று சோதியான் மகன் உனக்குச் சொல்லி அனுப்பியிருக்கிறான். = அனுமன். 

சோதியான்  என்றால் ஜோதியே வடிவானவன் -  சூரியன்.  சூரியனின் மகனான சுக்ரீவன்.   ' சீதையை விட்டு விடுக  என்று சுக்ரீவன் சொல்லி அனுப்பி  இருக்கிறான்.  உடனே அவளை விட்டு விடுக, " என்கிறான் அனுமன். 

இப்போது கூறுங்கள், அனுமனின் தோற்றம், ஆற்றல், பணிவு, வாக்கு சாதுர்யம் போன்றவற்றை முதன் முதல் பார்த்த மாத்திரத்தில் இவன்தான் சொல்லின் செல்வன் என்று ஸ்ரீ ராம பிரான் நினைத்ததற்கு பிறிதொரு கருத்து உண்டோ ?   

==  கடையநல்லூரான்                  

பதிவு : KADAYANALLURAN
நாள் : 4-Jan-19, 8:59 pm

மேலே