வீரர்கள் தினம் நவம்பர் 11 அமெரிக்கர்கள் வீரர்கள் தினம்...
வீரர்கள் தினம்
நவம்பர் 11 அமெரிக்கர்கள் வீரர்கள் தினம் என்று கொண்டாடுகிறார்கள். அந்நாட்டைக் காக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட வீரர்களின் தேசபக்தி மற்றும் அவர்களது சீரிய பணிகளை பாராட்டவும், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இந்நாளை அமெரிக்கர்கள் கொண்டாடுகிறார்கள். தெநாங்கில் ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டுறவு கூட்டத்துக்கு சென்றிருக்கும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் அவர்கள் அங்குள்ள அமெரிக்கா விண்தளத்தில் வியட்நாம் போரில் ஈடுபட்டிருந்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டார். முதற் உலகப் போர் முடிந்த தருவாயில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியது. 1926ஆம் நடந்த காங்கிரஸில் வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், உலக நாடுகளிடையே அமைதியுறவை மேம்படுத்தவும் தீர்மானம் போட்டனர். அதுவே போர் நிறுத்த தினம் என்றாகியது. பின்னாளில், இது வீரர்கள் தினம் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக, போர் இருந்ததோ, அல்லது அமைதியான கால கட்டங்களில் பணி புரிந்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாய் அமைகிறது வீரர்கள் தினம். . இந்தியாவில், ராணுவ தினத்தை (ஜனவரி15) ஒட்டியே வீரர்கள்தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியா, கனடா நாடுகள் நவம்பர் 11 நாளை ஞாபகார்த்த நாள் என்றும், கிரேட் பிரிட்டன் நவம்பர் ஒன்றாம் நாளை ஒட்டிய ஞாயிற்றுக்கிழமையை ஞாபகார்த்த தினம் என்றும் கொண்டாடுகின்றன.
::: கடையநல்லூரான்