அனைவருக்கும் வணக்கம் எட்டடுக்கு மாளிகையில் எந்த அடுக்கில் விரிசல்...
அனைவருக்கும் வணக்கம்
எட்டடுக்கு மாளிகையில் எந்த அடுக்கில் விரிசல் விழுந்தாலும் ,அந்தந்த அடுக்கில் விழுந்த விரிசலாகக் கருதக்கூடாது .அடித்தளத்தின் பலவீனம் என்றுதான் கருதவேண்டும் அதுபோல அதிகார வர்க்கம் ,நீதித்துறை ,ஆளும் வர்க்கம் என்ற அடுக்கில் எந்த அடுக்கில் விரிசல் தென்பட்டாலும் ,அது அடித்தளமாகிய வாக்காளர் பலவீனம் எனக் கருத வேண்டும்
மகா கவி பாரதியார் , "வருந் துன்பம் தவிர்க்கும் அமைச்சர்கள் மிக நன்னலம் கொண்ட குடிப்படை " என்பது பாரதி வடித்துக் கொடுத்த மக்களாட்சிக்குரிய அர்த்தசாஸ்த்திரம் .அது என்று வருமோ ?எப்போ வருமோ ?
திரு .தி.இராச கோபாலன் கருத்துக்கள்