பால்காரன் மணிசத்தம். எழுந்து ஓடும்நாய்கள். கோலத்தின் மீது பேப்பர்...
பால்காரன் மணிசத்தம். எழுந்து ஓடும்நாய்கள். கோலத்தின் மீது பேப்பர் போடும் சிறுவனின் சைக்கிள் டையர் அடையாளம். நடைபயிற்சி சென்றவர்கள் வியர்த்து திரும்புகிறார்கள். நந்தியாவட்டைச் செடியில் பூப்பறிக்கும் அடுத்த வீட்டு பையன். பால் குடிக்க அழுது, அடம், ஆர்ப்பாட்டம் செய்யும் குழந்தை. அவசரமாக மார்கெட் செல்லும் நபரின் பைக் சத்தம். மாடுகளுக்கு புல் அறுத்து சுமையோடு மொபைட்டில் பறக்கும் பெண். இந்த ரம்மியமான காலைப்பொழுதில் வேம்பில் அமர்ந்து கீச்சிடும் சிட்டுக் குருவிகள். மெல்ல தன் ஒளிக்கதிர்கள் வீசும் சூரியன் பயணம்.
இப்படி எல்லாமாக துரித கதியில் இயங்குகிறது அன்றாட வாழ்க்கை.
ந க துறைவன்