நீர்த்துளி உயிர்த்துளி நமது பூமி 71% நீரால் சூழப்பட்டுள்ளது.இதனாலேயே...
நீர்த்துளி உயிர்த்துளி
நமது பூமி 71% நீரால் சூழப்பட்டுள்ளது.இதனாலேயே பூமி நீலக்கோள் எனப்படுகிறது இவற்றில் 99.7% சதவீத நீரானது கடல் மற்றும் துருவப்பகுதிகளில் பனிமலையாக உள்ளது.மீதமுள்ள 0.3 % சதவீத நீரை மட்டுமே மனிதனால் உபயோகப்படுத்த முடியும்.`
பூமியில் நீரின் பரவல்
கடல் நீர்: 97.2 சதவீதம்
பனிப்பாறைகள் மற்றும் மற்ற பனி: 2.15 சதவீதம்
நிலத்தடி நீர்,: 0.61 சதவீதம்
நன்னீர் ஏரிகள் 0,009 சதவீதம்
உள்நாட்டு கடல்கள்: 0,008 சதவீதம்
மண் ஈரம்: 0.005 சதவீதம்
வளிமண்டலம்: 0.001 சதவீதம்
நதிகள்: 0.0001 சதவீதம்
சமீபத்திய ஆய்வு அறிக்கைகளின் அடிப்படையில் இந்தியா 2025 –ல் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையினால் பாதிக்கப்படும் என தெரியவந்துள்ளது.அதிகரிக்கும் மக்கள் தொகை ,பெருகி வரும் தொழில் வளர்ச்சி மற்றும் பருவ நிலை மாற்றம் ஆகியவற்றினால் தண்ணீர்த் தேவையின் அளவு வருடத்திற்கு 5 முதல் 10% அதிகரித்துகொண்டே போகிறது விவசாயத்திற்கு பயன்படும் 70% நீரும் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் 80% நீரும் நிலத்தடி நீரிலிருந்து பெறப்படுகிறது.ஒவ்வொரு வருடமும் 33 செ.மீ நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே போகிறது.
.
தண்ணீர் பற்றாகுறைக்கான காரணங்கள் :
அளவுக்கு அதிகமான நிலத்தடி நீர் பயன்பாடு,விவசாயம் மற்றும் தொழில்த்துறையில் முறையாக நீர்மேலாண்மை இன்றி உபயோகிப்பது மற்றும் மழைக் காலங்களில் ஏரி,குளங்களில் முறையான பராமரிப்பின்றி மழைநீர் வீணாக கடலில் சென்று கலப்பது திறந்தவெளி மனிதக் கழிவுகளால் நீர் மாசுபடுதல் போன்ற காரணங்களால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
2050 -ல் இந்தியாவின் நிலை
ஒரு பாட்டில் தண்ணீரின் விலை ரூ.2000
தண்ணீரை பதுக்கும் அமைச்சர்கள் !!
விஸ்வரூபம் எடுக்கும் தண்ணீர்பாட்டில் ஊழல்
தண்ணீரில்லாமல் சோலைவனங்களெல்லாம் பாலைவனங்களாக
தண்ணீரை பதுக்குவோருக்கு கடும் தண்டனை ----உச்ச நீதிமன்றம்
நீராதாரங்களை பாதுகாப்பதில் புதியதலைமுறையின் பங்கு
தனது குடிமகனுக்கு அடிப்படைத் தேவையான குடிநீர் வழங்குவது ஒவ்வொரு நாட்டினுடைய கடமையாகும். World Resources Institute ஆய்வறிக்கையின்படி 100 மில்லியன் இந்தியமக்கள் குடிநீர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர் .இந்தியாவின் மொத்தமுள்ள 632