மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 2
அடுத்த வாரம் மாமன்மகன்
வருவதாக பொய் கூறுவாய்
கடந்த வாரம் அத்தைமகள் வந்தாள்
என்ற உண்மையை வரவழைக்க !
ராட்டினத்தில்
உன்னோடு சுற்றிய பின்புதான்
புவியியல் புரிந்தது
பூமி கோளம் என்று !
திருவிழாபட்டாசு வெடிக்கும் நேரத்தில்
என் பின்னே ஒளிந்து கொள்வாய்
பயல் அல்ல...
பட்டாசு அனைத்தும் உனை கண்டு பின்
பதத்துவிடும் என்பதனால்தான் !
தேர்வடம் பிடித்து இழுக்க
தம்பதியினரை அழைக்கும்போது
முந்தி சென்று வடம் பிடித்தது நாமாகத்தான் இருக்கும்
மஞ்சள்கயிறு கட்டும் முன்னே தம்பதியரானோம் !
வீட்டருகே தேர்வந்தால்
அடுத்து வந்து நின்று கொள்வாய்
முதலில் குடும்பபுகைப்படத்திலும்
அடுத்ததாய் குடும்பத்திலும்
இடம்பெறும் குறிப்புஅறிந்து !
நான் ஊருக்கு வருவதை
வானவில்லின் வர்ணமாகிய
உன் வீட்டுகோலம் சொல்லுமடி ஊருக்கு !
நீ புள்ளி வைப்பதுஎன்னவோ
உன் வீட்டு முற்றத்தில்தான்
கோலமிடுவதோ என் வீட்டு
துளசிமாடத்தில்தான் !
நீ பாதி நான் பாதி
கடித்து துப்பிய வேப்பம்பழம்
அழகாய் வளர்ந்து மஞ்சளுடுத்தி
ஊருக்கே காவல் தெய்வமாகிபோனது !
அமீரகத்திலிருந்தும்
கண்ணாடி வலையல் கேட்கும்
தேவதை நீ மட்டும்தானடி !
மொட்டை மாடியில் படுத்துகொண்டு
விமானத்திடம் நீ சொல்லும் சேதி அனைத்தும்
பத்திரமாய் குறித்து வைத்திருக்கிறேன் !