Vasanth UK - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Vasanth UK |
இடம் | : London |
பிறந்த தேதி | : 31-Oct-1978 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Nov-2012 |
பார்த்தவர்கள் | : 1318 |
புள்ளி | : 152 |
தமிழனா பிறந்ததிற்கு பெருமைப்படுகின்றேன்... வசந் :)
உன் விழிகள்
என் கனவை
களவாடிய போது
தூர தேசத்து
மலர்த்தோட்டத்தில்
பனியாக விண்மீன்கள்
பொழிந்திருக்கக் கூடும்.
இரட்டை ஜடை கட்டி
கண்களுக்கு மை பூசி
அவள் புன்னகைத்தால்
ரோஜாக்களும் என்னவள்
இதழில் சாயமாகும்
அதை திருடி
உண்ணும் பட்டாம்பூச்சி நான்
உன் கால் கொலுசின்
மணியாக
இருக்க ஆசைப்படுகிறேன்
மஞ்சள் பூசி குளிக்கும் போது
என்னையும்
நீ தொடுவாய் என்பதால்..,
என் வீட்டு
முயல் குட்டியும் உன்னிடம்
செல்லமாக ஆசைப்படுகிறது,
நான் உன்னையே
கேட்கிறேன் மொத்தமாக...,
துப்பட்டா விலகும் நேரம்
காற்றாய் உன்னுள் நுழைகிறேன்
வெட்கம் எனும் கதவை
எப்போது திறந்து விடுவாய்.
சின்ன சின்ன வண்ணப் பூக்களில்
தன்னைத் தொட்டதும் மலர்ந்திடும் பூவே
உதயம் என்பது உனக்கொரு நொடிதான்
இதயத்தில் உதிராது வசிப்பது உன்னுறவுதான்......
தேசம் விட்டு தேசம் சென்றும்
நேசம் வைத்திடும் இளந்தென்றலே
வெண்ணிலவாய் வானில்நீ ஒற்றைப் புள்ளி
எண்ணிக்கையில் விண்மீன்களாய் தொடரும் புள்ளி......
கன்னல் உள்ளிருக்கும் கனிந்த அமுதே
மின்னுகின்ற பொன்னொளி வடிவே
ஆலமர விழுதுகள் போன்று
ஆபத்தில் தாங்கிடும் கரங்கள் உன்னுடையதே......
முளைத்த பயிர்களின் உள்ளம் அனைத்திலும்
விளைந்திடும் விலை மதிப்பற்ற செந்நெல்லே
களைத்த நெஞ்சத்திற்கு களிப்பூட்டி
கவலைத் துரத்திடும் கலைஞனும் நீதானே......
இமையா
உன்னை விட
உன் கண்கள்
நிறைய மொழிகள்
அறிந்து வைத்து இருக்கின்றது
ஒவ்வொரு முறையும்
வேறு வேறு மொழியில்
பேசுகின்றதே -ஆனாலும்
எல்லாம் பிடித்த மொழிகள்தான்...
இக்கணமே
இறக்கவேண்டும் என்று
என்னுள்ளே ஒரு குரல்...
என் ஆயுள்
நீள வேண்டுமென்றால்
உன் அன்பு தான்
மருந்தென்று
இன்னும் ஒரு குரல்...
கிடைக்குமா உன் அன்பு ?
நீழுமா என் ஆயுள் ?
என்னை எனக்கே
பிடிக்கவில்லை
உனக்கு மட்டும்
பிடிக்கிறதே
என்னை நான்
நினைப்பதை விட
என்னை நீ
நினைப்பதுவும் ஏனோ
கண்ணை நான் மூடியதும்
கள்ளச்சாவி கொண்டு
எப்படி திறந்து
உள்ளே வருகிறாய்?
காலம் கடந்து
கடல் கடந்து
கதிரவன் கடந்த நேரத்தில்
கனவுகளில் தரிசனம் கொடுத்த
கனவு கன்னியை
கட்டி அணைத்தேன்
முத்தங்கள் கொடுத்தேன்
மூச்சு சுவாசம் உணர்ந்தேன்
ரெம்ப நேசிக்கும் கண்கள்
பாசமாய் பார்த்தன
எப்போதும் வேண்டும் சிரிப்பு
என் கண்முன்னே மின்னியது
இறுக்க அணைத்தாய்
இனிமையாய் முத்தமிட்டாய்
இருக்க பணித்தாய்
இம்சைகள் செய்தாய்
உறங்க உத்தரவிட்டாய்
உறக்கத்தில் மறுபடி முத்தமிட்டாய்
கையில் முட்டை காப்பியோடு
கை தட்டி எழுப்பினாய்
கண்மூடி உறங்கினாலும்
உன் காப்பி வாசமும்
தோசை வாசமும்
கை தட்டி எழுப்புகின்றதே.♥
பிரிவு என்பது பேசாமல்
விடுவதில் இல்லை
பேசிக்கொண்டு இருப்பவரெல்லாம்
உள்ளத்தால் ஒன்று
சேர்ந்தவர்களும் இல்லை
உள்ளங்கள் ஒன்று சேர்ந்த பின்
பிரிவு என்பது
நம் மரணத்தில் மட்டுமே.
வட்டமிடும் கழுகுக்கு
உண்ண உணவு வேண்டும்
முத்தமிட நீ
எனக்கு வேண்டும்.
ஒரு கை பிடித்து
ஒற்றை அடி பாதையிலே
வழி நடத்தி
முன் சென்றேன்
என் மனதை மட்டும் உன்
பின்னே செல்ல விட்டேன்...
என் அத்தானுடன் நானிருந்த
அழகிய நாட்களில்
ஒவ்வொரு பொழுதும்
ஒவ்வொரு நொடியும்
என் வாழ்கையில்
இனிமையான பொற்காலமே.
நாம் சேர்ந்து சென்ற
காலம் என்றும் பசுமையே
நாம் ஒன்றாக நின்று
ரசித்த பொழுதுகளும்
அதன் நினைவுகளும்
தினமும் இன்பமே.
எனை அழைத்துச்சென்ற
அழகிய இடங்களில்
தன் பார்வையாலே
எனை அரவணைத்தும்
என்னவன் பேசிய வார்த்தையால்
நான் ரசித்து சிரித்ததும்...
நினைக்கும் போதெல்லாம்
அன்புக்கு அடிமையாகி
என் அத்தானை முத்தமிட்டு
கட்டி அணைக்க தோணுதே
நித்தமெல்லாம் என்னைத்
தித்திக்க வைத்துவிட்டாயே.
தொடரும் உன் நினைவுகளால்
கொஞ்சிடும் கனவுகள்
நெஞ்சினில் ஏக்