என் அத்தானுடன்

என் அத்தானுடன் நானிருந்த
அழகிய நாட்களில்
ஒவ்வொரு பொழுதும்
ஒவ்வொரு நொடியும்
என் வாழ்கையில்
இனிமையான பொற்காலமே.

நாம் சேர்ந்து சென்ற
காலம் என்றும் பசுமையே
நாம் ஒன்றாக நின்று
ரசித்த பொழுதுகளும்
அதன் நினைவுகளும்
தினமும் இன்பமே.

எனை அழைத்துச்சென்ற
அழகிய இடங்களில்
தன் பார்வையாலே
எனை அரவணைத்தும்
என்னவன் பேசிய வார்த்தையால்
நான் ரசித்து சிரித்ததும்...

நினைக்கும் போதெல்லாம்
அன்புக்கு அடிமையாகி
என் அத்தானை முத்தமிட்டு
கட்டி அணைக்க தோணுதே
நித்தமெல்லாம் என்னைத்
தித்திக்க வைத்துவிட்டாயே.

தொடரும் உன் நினைவுகளால்
கொஞ்சிடும் கனவுகள்
நெஞ்சினில் ஏக்கங்கள்
தொடர்கிறது என்னுடனே
உன் அன்பால் என்னையே
தொலைத்துவிட்டேன்.

நீ செல்லும் போதே என் இதயத்தை
கொண்டு சென்றுவிட்டாய்
என்னருகில் வந்துவிடு என்னவனே
நீ நடந்து சென்ற
உன் பாதச் சுவட்டை பார்த்து
என் விழிகள் தேடுதிங்கே.

எழுதியவர் : அமுதா (11-Apr-16, 7:35 pm)
பார்வை : 102

மேலே