உண்மையாய் நேசிக்கிறேன்
உண்மையாய் உன்னை நேசிக்கிறேன்
மென்மையாய் உறவை போற்றுகிறேன்.
நீ நடந்து செல்லும் சாலையாய் நானிருக்க தயார்
உன் வாழ்வு சிறக்க ஏணியாய்
நிற்கவும் தயார்
உனைக் காக்கும் வீரனாய் முன்னிற்க தயார்
உன் கை உருட்டும் பகடையாய் மாறவும் தயார்.
நீ படும் கஷ்ட நஷ்டங்களை நான் ஏற்க தயார்
உன் கடுந்துயர் துக்கங்களை மாற்றவும் தயார்
எனக்கு உண்மையாய் ... என்னோடு இருந்துவிடு
உறவுக்குள் நேர்மையாய் ... அன்போடு இருந்துவிடு.
.