கள்ளச்சாவி கொண்டு

என்னை எனக்கே
பிடிக்கவில்லை
உனக்கு மட்டும்
பிடிக்கிறதே
என்னை நான்
நினைப்பதை விட
என்னை நீ
நினைப்பதுவும் ஏனோ
கண்ணை நான் மூடியதும்
கள்ளச்சாவி கொண்டு
எப்படி திறந்து
உள்ளே வருகிறாய்?

எழுதியவர் : நேசா (7-Aug-16, 11:39 pm)
பார்வை : 84

மேலே