எப்போதும் வேண்டும் ♥

காலம் கடந்து
கடல் கடந்து
கதிரவன் கடந்த நேரத்தில்
கனவுகளில் தரிசனம் கொடுத்த
கனவு கன்னியை
கட்டி அணைத்தேன்
முத்தங்கள் கொடுத்தேன்
மூச்சு சுவாசம் உணர்ந்தேன்
ரெம்ப நேசிக்கும் கண்கள்
பாசமாய் பார்த்தன
எப்போதும் வேண்டும் சிரிப்பு
என் கண்முன்னே மின்னியது
இறுக்க அணைத்தாய்
இனிமையாய் முத்தமிட்டாய்
இருக்க பணித்தாய்
இம்சைகள் செய்தாய்
உறங்க உத்தரவிட்டாய்
உறக்கத்தில் மறுபடி முத்தமிட்டாய்
கையில் முட்டை காப்பியோடு
கை தட்டி எழுப்பினாய்
கண்மூடி உறங்கினாலும்
உன் காப்பி வாசமும்
தோசை வாசமும்
கை தட்டி எழுப்புகின்றதே.♥

எழுதியவர் : நேசா (7-Aug-16, 11:10 pm)
பார்வை : 115

மேலே