அவளுக்கு நிகர் அவளே--முஹம்மத் ஸர்பான்

உன் விழிகள்
என் கனவை
களவாடிய போது
தூர தேசத்து
மலர்த்தோட்டத்தில்
பனியாக விண்மீன்கள்
பொழிந்திருக்கக் கூடும்.

இரட்டை ஜடை கட்டி
கண்களுக்கு மை பூசி
அவள் புன்னகைத்தால்
ரோஜாக்களும் என்னவள்
இதழில் சாயமாகும்
அதை திருடி
உண்ணும் பட்டாம்பூச்சி நான்

உன் கால் கொலுசின்
மணியாக
இருக்க ஆசைப்படுகிறேன்
மஞ்சள் பூசி குளிக்கும் போது
என்னையும்
நீ தொடுவாய் என்பதால்..,

என் வீட்டு
முயல் குட்டியும் உன்னிடம்
செல்லமாக ஆசைப்படுகிறது,
நான் உன்னையே
கேட்கிறேன் மொத்தமாக...,

துப்பட்டா விலகும் நேரம்
காற்றாய் உன்னுள் நுழைகிறேன்
வெட்கம் எனும் கதவை
எப்போது திறந்து விடுவாய்..,

உன் இதழில்
நிலவின் திருஷ்டி
பட்டுத்தான்
கருமச்சம் பூத்திருக்கிறது..,

என் காதலி அழகை கவிபாட
உலகத்தின் பரப்பும்
காகிதமாய் போதாது..ஒற்றைச்
சொல்லில் பாடுகிறேன்.
அவளுக்கு நிகர் அவளே

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (16-Jul-16, 7:53 pm)
பார்வை : 377

மேலே