விழி நிலா

கலைந்த கூந்தல் முடிந்து
கதிரவனிடம் சண்டையிட
எழுகிறாள் என்னவள்
என் முகமே உன்னிலும்
பிரகாசமானதென..

இரவிலும் அவளுக்கு
போட்டியுண்டு
இருந்தும் பயனில்லை
இரு நிலவை கண்களாக
கொண்டவளிடம் பாவம்
என்ன செய்யும் அவ்வொற்றை நிலா..!

எழுதியவர் : மிதிலை ச ராமஜெயம் (16-Jul-16, 8:02 pm)
Tanglish : vayili nila
பார்வை : 110

சிறந்த கவிதைகள்

மேலே