மருதாணி கண்ணுக்காரி
காணாத காணகத்த
கண்ணோட காண வைச்ச...
பாடாத பாட்டெல்லாம்
மனசோட பாட வைச்ச...
மருதாணி கண்ணுக்காரி...
ஏ மனசோட சொந்தக்காரி...
ஓ நெனப்பால
தினம் தினம் சாகுறேன்டி...
கட்டு வெறக போல
நித்தமும் வேகுறேன்டி...
வெளஞ்ச கருதா காத்திருக்கேன்
வளச்சி ஒடச்சி போயேன்டி...
நனஞ்ச குருவியா நடுங்கிருக்கேன்
கொஞ்சம் ஏறெடுத்து பாரேன்டி...
வெதச்ச கையி
இப்ப உன்ன அனைக்க நெனக்குதடி...
நெனச்ச நெஞ்சி
இப்ப உன்ன பாக்க துடிக்குதடி...
ஒத்த மரமா தனிச்சிருக்கேன்
ஊஞ்சல் கட்ட வாயேன்டி புள்ள...
மத்த கத ஒன்னும் வேணா
ஒத்த வார்த்த மட்டும் சொல்லேன்டி புள்ள...
காணாத காணகத்த
கண்ணோட காண வைச்ச...
பாடாத பாட்டெல்லாம்
மனசோட பாட வைச்ச...
மருதாணி கண்ணுக்காரி...
ஏ மனசோட சொந்தக்காரி...
-#கோபி சேகுவேரா