நட்பு

நம்மைப்பற்றி ...
நம் நினைவுகளுடன்...
அன்றும் ..என்றும்...
நம் நட்பு.

மீசை முளைத்தாளென்ன?

சற்று முடி நரைத்தாலென்ன?

காலங்கள் சென்றாலென்ன?

எத்தனை வருடங்கள் வாழ்ந்தாலென்ன ?

ஒற்றை சொந்தம்
நட்பு மட்டும் சொல்கிறது அன்றும் இன்றும் என்றும் உன்னுடன் ....


நாம் சேர்ந்து
அன்று தின்று தீர்த்த திண்பண்டங்கள் அன்று தந்த சுவையை விட
அதிகமாய் இன்றும் இனிக்கிறது ....

அன்று நாம்
ஆற்றங்கரையில் சண்டையிட்டு வாங்கிய வடுக்கள்
நாம் வாழும் வரை உன்னுடன் என்கிறது நண்பனே ....

நம்
காதல் தோல்வியோ
வெற்றியோ ஏதோ சில வருடல்கள்...
காதல் தந்த சுகத்திற்கு ஈடாக இன்றும் நினைவில் போட்டி போடுகிறது...

நண்பர்களே
ஒரு உண்மையான மாயங்கள்
எது வெனில்?
நம் நட்பு தரும் நினைவுகளே ....

அன்று உங்களுடன் நான் எதுவாகினும் ...
அன்றும் இன்றும் என்றும் என்னை மகிழ மட்டுமே செய்கிறது....

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்🙏🙏🤝🤝

என்றும் உங்கள் நினைவுகளுடன்
மருது பாண்டியன்..

எழுதியவர் : மருதுபாண்டியன்.க (6-Aug-23, 1:31 pm)
சேர்த்தது : மருதுபாண்டியன்க
Tanglish : natpu
பார்வை : 398

மேலே