பெண்ணே நீ தலை நிமிர்ந்து நில்லு

டாக்டர் லதா கிறிஸ்டி...
அற்புத பதிவை பதிவிட்டமைக்கு
தங்களுக்கு நன்றி...

தமிழிலும் தங்களின் பேச்சு
சிறப்பாக இருக்கிறது...
மதிப்புள்ள பதிவு
இரண்டு காரணிகளில் மேலும்
மதிப்புக் கூட்டல் பெறுகிறது...

ஒன்று... சாதனை விஞ்ஞானி
சாமானியர்களின் வேதனைகளை
அலசி ஆராய்வது...
இன்னொன்று.. பெண்கள் பலரின்
துயரங்கள் சொல்லி
தீர்வுகளும் சொல்லியிருப்பது...

கொஞ்சும் தமிழ் கவர்கிறது...
பெண்களின் மாண்பு சொல்ல
பாரதி வந்து போகிறார்...
சமநீதி தந்து போகிறார்...

பெண்கள் சுதந்திரத்தை
வேர்கள் முதல் விழுதுகள் வரை
விசாரிக்கும் உங்கள் உரை
பெண் சுதந்திரம் மறுக்கும்
தடைகளை உடைக்கும்
அதே வேளையில் எல்லைகளை
வரையறுக்கவும் தவறவில்லை...

பெண்களுக்குக் கவனத்தையும்
ஆண்களுக்குப் புரிதலையும்
சிறப்பாகச் சொல்லி
சிந்திக்க வைக்கிறீர்கள்...

எரிமுன்னர் வைத்தூறு போல
ஆகி விடாமல்
வருமுன்னர் காப்பதற்கு
ஒட்டுமொத்த சமுதாயம்...
குறித்து வைத்துக் கொள்ள
வழிமுறைகள் உங்கள் உரையில்
நிறைய உள்ளன...

தங்களின் உரை...
வாக்கியங்களுக்கு இடையே
நேரங்களை விரயமாக்கி விடாமல்
வேக வேகமாய்ப் போகிறது...
அது விவேகமாய் இருக்கிறது...
விஷயங்களைப் புரிய வைக்கிறது..

வலிகள் வேதனைகளெனும்
நெருப்புச் சாம்பலில்
கரைந்து விடாமல்
பீனிக்ஸ் பறவைகளாய்
உயிர்த்தெழ உத்திகள் இருக்கின்றன..
உங்களின் உத்வேக வார்த்தைகளில்..

பெண்ணே... நீ
தலை நிமிர்ந்து நில்லு...
என்னும் தலைப்பிலான
தங்களின் இந்த பேச்சில்
பெண்கள் பலர்... துயரங்கள்
நீங்கி சிகரங்கள் அடைவர்...

அருமையான செய்திகள்
கொட்டிக் கிடக்கிறது...
தரணியில் தமிழ் தெரிந்த
அத்தனை பேர்களுக்கும்
அவசியம் சென்றடைய வேண்டிய
அழகிய பதிவு இது..

தங்களின் அயராத உழைப்பில்
ஆச்சரியம் கொள்கிறேன்...
எங்கு சேமித்து வைத்திருக்கிறீர்கள்
இத்தனை அறிதலையும் புரிதலையும்...
மனமார்ந்த பாராட்டுதல்கள்...

ஆர்.சுந்தரராஜன்.
👍👏🙏

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (16-Sep-21, 10:45 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 252

மேலே