தாயே தமிழே
தமிழ் பேசும் நல்லுலகம்
வையகத்தின் வசந்த தேசம்.. அது
அர்த்தங்களின் அனாயாசம்...
ஆனந்த சுவாரசியம்...
முழு உலகத்தின் கூறுகளைத்
தனக்குள் கொண்ட
இனிப்புப் பிரதேசம்...
இனிதாய் வாழ இன்பமாய் வாழ
வழிகள் சொல்லி வரங்களை
அள்ளித் தருவதால்...
தமிழைத் தாய்மொழியாய்க்
கொண்டு பிறக்கும் குழந்தைகள்
யாவும் இங்கு செல்வந்தர்களே..
ஒட்டு மொத்த உலகம்
தமிழ் உலகைப் பார்க்கிறது.. அதன்
நேர்த்தி கண்டு வியக்கிறது...
மொழியால் சிந்தனையும்
சிந்தனையால் மொழியும்
வளரும் அதிசயம்
இங்குதானே நிகழ்கிறது...
அறுபது வயதிற்குள்
முதன் முதலாய்...
அறுபதைத் தாண்டியவர்க்கு
இரண்டாம் முறையாய்...
வந்துதித்த பிலவ வருடத்தில்
மகிழ்ச்சி.. என்றும் நிலவ
இனிய தமிழ் புத்தாண்டு
நல் வாழ்த்துக்கள்!
மலர்களின் வாசத்தில்
சந்தனத்தின் சங்கமம்
சாகசம் செய்யும்...
பலாவோடு தேனும் சேர
அது இன்னும் இனித்திடும்...
அழகிய நந்தவனத்தில்
குளிர் தென்றல் வீசிடக்
கூடுதல் இன்பம் கிடைத்திடும்..
இனிய இசையில்
மோகனம் மயக்கிடும்...
இவை ஒன்று சேர்ந்தால்
பெற்றிடும் இன்பம் அத்தனையும்
தமிழோடு சேரும்
பிலவ வருடத்தில் நிலவட்டும்...
அழகு தமிழே! அற்புத மொழியே!!
எமது பெருமிதம் நீயே!!!
என்றும் வாழும் தாயே...
அரவணைத்திடும் அன்னையே...
வணங்குகிறோம் உன்னையே...
அன்புடன்...
ஆர்.சுந்தரராஜன்.
👍😀🌹🌺🌷