ராஜ்குமார்
ஊருவிட்டு ஊர் மட்டுமல்ல..
நாடுவிட்டு நாடு மட்டுமல்ல..
கண்டம்விட்டு கண்டம்...
ஒன்றல்ல இரண்டல்ல
இருபத்தைந்து ஆண்டுகள்..
சென்று... அங்கு வென்றது
நண்பன் ராஜ்குமாரின்
திறமைக்குச் சான்று..
அது மிக்க நன்று...
திறமை இருந்தும் இல்லாமலும்
வாழ்ந்துதான் ஆகவேண்டும்
தாய்த் திருநாட்டில்...
திறமை இருந்தால் மட்டுமே
வாழமுடியும் அயல்நாட்டில்...
அமெரிக்கா... அது
ராஜ்குமாரின் திறமையில்
விசா சல்லடை இனி உனக்கு
வேண்டாம் என்றது...
கிரீன் கார்டு தந்து தன்னோடு
தக்க வைத்துக் கொண்டது...
சூரியன் இவனுக்கு
இருபத்துநான்கு மணி நேரமும்
சொந்தமாகிப் போனது... அதனால்
பந்தங்கள் கூடிப்போனது...
இந்திய இருட்டு
அமெரிக்க வெளிச்சத்திலும்
அமெரிக்க இருட்டு
இந்திய வெளிச்சத்திலும்
ஒளியைப் பெற்றுக்கொள்ளும்
இவனது உலகத்தில்...
டொனால்டு ட்ரம்ப்பின்
ராஜ்ஜியத்தில் அமெரிக்கா மட்டும்தான்...
ராஜ்குமாரின் ராஜ்ஜியத்தில்
இந்தியாவும் அமெரிக்காவும்...
கற்றாருக்கு சிறப்பு
சென்ற இடமெல்லாம்...
மற்றாருக்குச் சொல்ல
வேண்டும்... இதையெல்லாம்...
திறமையெனும் மூலதனம்...
தான் தலை நிமிர்ந்தது மட்டுமல்ல..
ஒரு தலைமுறை
தலை நிமிர்ந்தது இதனால்...
தலைமுறைகள் வாழ்த்தும்...
தலையாய கடமையாய் நினைத்து
பணியாற்றுகிறான் அதனால்...
கணினிப் பொறியியலும்
இயந்திரவியலும்
மின்னணுப் பொறியியலும்
கோலோச்சும்... அமெரிக்க வல்லரசில்
என்பது வரலாறு... அது
அமைப்பியல் பொறியியலால்
திருத்தி எழுதப்படுகிறது இப்போது...
நினைத்ததெல்லாம் ஈடேற
வானமும் வசந்தமும் வசப்பட
வாழ்க பல்லாண்டு...
வளங்கள் பல பெற்று...
நண்பன் ராஜ்குமார்...
இனிய பிறந்தநாள்
நல் வாழ்த்துக்கள்...
அன்புடன் நண்பன்...
ஆர்.சுந்தரராஜன்.
👍👏💐🌹🌺🌸🧁🎂