ஜனநாயகம் 😭

ஜனநாயகம் 😥😥

மக்களை கூட்டி
மேடை போட்டு
வீர முழக்கம் இட்டு
வாக்குறுதிகளை அள்ளி வீசி
வாய் சொல்லின் வீரர்கள்
சாமானியனின் கண்ணீரை
துடைக்கிறேன் என்று
சாமானியடம் கடைசியாக
மிஞ்சியிருந்த கோவணத்தையும் களவாடிவிட,
ஏமாற்றப்பட்ட அவன்
தன்மானத்தை காப்பாற்றி கொள்ள அவன் படும் திண்டாட்டத்தின் பெயர் தான்"ஜனநாயகம்".

- பாலு

எழுதியவர் : பாலு (27-Nov-19, 6:34 pm)
சேர்த்தது : balu
பார்வை : 445

மேலே