காற்று தாங்கி நீ வர,
கார் காலக் காற்று தாங்கி நீ வர,
கரியன்ன நிறம் கொண்டுதான் வர,
கவிஞர்கள் மனம்தான் உனைக் கண்டு
கதிரவன் கண்ட தாமரை போல்
மகிழ்ச்சி கொண்டு பாராட்ட.....
இருண்டு, திரண்டு, உருண்டு வரும்
இனிமை நிலை கொள்ள வைக்கும் முகிலே!
காய் போல மனம் கொண்ட பலர் நடுவே
கனி மனம் கொண்ட கன்னி உலா போல
எரி தணல் கதிரவன் வெம்மை தணிக்க
எங்கள் மனம் இனிமை கொள்ள வரும் முகிலே!!
விரைவாக நீ வந்தும் மண்ணில்
மழையாய் விழாமல் போவதும் ஏனோ??
பாவம் மிகுந்த பலர் நடுவே
நீ விழுவது பாவம்
என்று எண்ணினாயோ??