மென்மை நாணம் முகத்தில்
கூந்தல் நிறைத்து மல்லிகையை
பெண்கள் சூடி,
தலை குனிந்து தண்ணீர்க் குடமெடுத்து
இடை அசைத்து நடந்து வருகையில்,
இடையில் பின்னல் அசைந்தாடுகையில்
முன்னும் பின்னும் வளைகரங்கள் அசைகையில்
முன் நிமிர்ந்து பாராது வருகையில்
மெட்டி ஒளி மெல்ல ஒலிக்கையில்
மென்மை நாணம் முகத்தில் பரவுகையில்
மஞ்சள் பூசிய முகமும்,
பாதங்களும் மௌனமாய் அடியெடுத்து வைக்கையில்
கைகள் கொஞ்சம் புடவை தூக்கி
கனிவுடன் நடந்து வருகையில்
மனம் பறி கொடுத்தேன்
நானும் இக்காட்சியில்.....
(இப்போது தண்ணீர் குடம் எடுத்து பெண்கள் நடந்து வருவதை பார்ப்பதே அரிதான ஒன்றுதானே....)
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
