கன்னியாய் நான்
குழந்தையாய் நான் இருந்தேன்
குறைகள் என்னை தீண்டவில்லை
துள்ளித் திரிவதும், துவண்டு விழுவதும்,
துயில் கொள்ளுவதும் பணியாக இருந்தேன்
கன்னியாய் நான் மலர்ந்தேன்
மயக்கம் தரும் சோதனை பல....
சிக்கலைத் தீர்க்க முடியாத
சிலையாகி போனேன்...
மனத்துயர் தீர்க்க இங்கு
மருந்தில்லாது துவள்கிறேன்
மழலை பேசி கொஞ்சி விளையாடி
மண்ணில் தவழும் குழந்தை பருவமே
எனக்கு வேண்டும்
வளராத ஒரு வரத்தை
வண்ணக் கடவுள் எனக்கு தர வேண்டும் ...