தனிமையின் துயரம்
கைபேசியில்
மெய்பேசும் முன்பே
இதயத்துடிப்பை
இரட்டிப்பாக்கும்
தனிமையே.....
இரவென்ற ஈராறு
மணி நேரத்தை ஓராறு
ஆக்கியதும்
தனிமையே...
உயிர் தந்த
அன்னையையும்
என் உயிரான
பிள்ளையையும்
இவையிரண்டும் சேர்ந்த
உன்னையும் இல்லாது
ஆக்கியதும்
தனிமையே.....
என் எழுதுகோலும்
எண்ணிச் சிந்தும்
சொல்நீரைத் தந்ததும்
தனிமையே....
ஆணி வேரின்
அடிமுனி என்னவோ
தொலைவுதான் --ஆனால்
நிழல் தாங்கும் மரத்தின்
வளர்ச்சியை தந்ததும் அதன்
தனிமை தானே
ஆகையால்
தனிமையும் ஒரு வகையில்
நிழல் தரும்
இனிமையே.....
💖💖💖💖.....தயா.....✍💖💖💖