விழி எழுதிய காதல்

பச்சை மெத்தைகள்
விரித்த புல்வெளிதளங்கள்.
வெள்ளை தாவணியை
விட்டெறியும் நீர்விழ்ச்சி.
கருப்பு மேனியில்
உயர்ந்த மரங்கள்.
சிவப்பு வெட்கத்தில்
அந்தி வானம்.
சிறகடித்த சில்மிஷ
சத்தத்தோடு காதல்பறவைகள்.

இப்படியான அழகான
இயற்கையான சொர்க்கம்.-இந்த
இனிமையான தனிமையில்
என்னோடு அவள்.
அவள் விரல்களோடு
பிணைந்த என் விரல்கள்.

தோள்கள் இரண்டும்
சிநேகம் கொள்ள
இதயங்கள் இரண்டும்
மெளன சங்கீதம் பாட..

இதழ்கள் சொல்ல துடிக்கும்
காதலை சொல்ல துணியாமல்
தயங்கி தயங்கி -மனம்
துடி துடித்திருந்த நேரம்

என்னை கேட்காமலே
எனது காதலுணர்வை
தூது அனுப்புகிறது
அவளின் கயல்விழியிடம்
எந்தன் காந்தவிழிகள்.

விழியாள் அவள்
என் மீதான
காதலில் விழுந்தாளோ..?
என் காந்த
பார்வையில் மயங்கினாளோ?

தெரியவில்லை...!
தெளிவு பெறவில்லை
தெளிவுப்பெற விரும்பாமலே
மயங்கி மயங்கி
ஏங்கி கிடக்கிறேன்
அவள்
அல்லி தாமரை மடியினிலே.....!

இது...
விழி எழுதிய காதல்..!
விதி செய்த கவிதை..!

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார். (14-Mar-14, 2:29 am)
பார்வை : 1064

மேலே