விடுதலை எங்கே

தடையற்று வானிலே மிதக்கின்ற மேகத்தை
தடுப்பார் யாருமில்லை
கார்மேகத்தை கரத்தால்
கலைப்போர் உண்டோ ?
வானவில்லை வளைத்து
அம்பு நாண் தொடுப்போர் உண்டோ ?
வானச் சேலையை மடித்து
மானத்தை மறைத்த
மங்கைகள் உண்டோ ?
காட்டிலே விரிந்த
மனமிகு மல்லிகை மணத்தை
கைபொத்தி அடைப்பாரில்லை
ஆழ்கடலில் அலையும் மீனின் கண்ணீரை
கரைதனில் நின்று கண்டோர் உண்டோ ?
காம இச்சையில் கரம்தொடும்
பரத்தை உள்ளத்தை
இரவில் இரக்கத்தோடு பார்த்தோர் உண்டோ ?
இரவு பகல் பாராது ஓயாது உழைத்து
உயர கட்டிய தேன்வீட்டை
தீண்டிப்பார் .................
பெண்தேனியின் போர்குணம் உமக்கு புரியும் .
தடையின்றி ஈழ வையகம் தந்தோன்
உரிமையை ,உணர்வை
தடைச்செயல் தரணி ஏற்குமோ ?
தாயகம்! தாயகமென மார்தட்டிய
மாசற்ற மங்கையர் மார்பகங்கள்
சிங்கள மாக்களே உனக்கு மாங்கனிகளா?
தாய்ப்பால் அருந்தா
தரமற்ற உனக்கு தாய்மைக் குணம்
அறியாது போலும் .
கருவுற்ற பெண்டிரை கருக்களைத்து
உயிர்குடித்தாய் ......
இளம்கன்னியரை காமத்தீயில் சுட்டெரித்தாய் .
ஏழை தமிழ்க்குடியில் நெருப்பிட்டு
எமது அன்னையர் அலர்குரல் கேட்டு
ஆனந்த கூச்சலிட்டாய் ..
பள்ளிதனில் சென்று
செந்தமிழை பயிலவிருக்கும்
பச்சிளம் குழந்தைகளை பார்காணும்முன்
பாதியிலே உயிர்பறித்த சிங்களனே !
உமது ஆதிக்க வெறியாட்சி
அடித்தளமில்லாது ஆட்டம்காணும் .
அடிமை என்றும் அடிமையில்லை
தமிழரின் அடிமையும் ,அச்சமும் வீழும் நாள்விடுதலை பெரும்
வியத்தகு நாள் எந்நாளோ ?
அன்றுதான் தமிழருக்கு உண்மை விடுதலை நாள் .
ஈழத் தமிழருக்கு பொன்னாள்.







இளையகவி

எழுதியவர் : இளையராஜா .பரமக்குடி (14-Mar-13, 2:42 pm)
பார்வை : 254

மேலே