களவு போன இதயம் ...

கனவு தோட்டத்தில்
களவு போனது
என் இதயம் மட்டுமல்லாமல்
உன் இதயமும் தான்
ஏனென்றால்
என் இதயத்தை நீ எடுத்தும்
உன் இதயத்தை நான் எடுத்தும்
பரிமாறிய விஷயங்கள்
நிறைய ....கண் விழித்து
காணும் போது தான்
கர்வம் கொண்டது என் மனம்
கனவிலாவது என்னை நீ
களவாடியது தெரிந்ததால் ....

எழுதியவர் : (14-Mar-13, 2:23 pm)
சேர்த்தது : paptamil
பார்வை : 100

மேலே