paptamil - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : paptamil |
இடம் | : coimbatore |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 21-Feb-2013 |
பார்த்தவர்கள் | : 341 |
புள்ளி | : 89 |
teacher
கடல் அன்னை கண்டெடுத்த
முத்து குவியலே ...
அலை அடிக்கும் காற்றினில் வீசும்
அசைவ வாடையே ...
கப்பலில் மட்டும் தான்
சரக்கு பரிமாற்றமா ?...
என் மக்களும் சரக்கை
தினமும் பரிமாறி கொள்கிறார்கள் ...
ஊருக்கெல்லாம் உப்பிட்டு வளர்க்கும் தாயே
உன்னை நீயே வதைத்து கொள்ளுகிறாயே ...
ஊரின் பெயரில் மட்டும் தான்
"குடி" க்கு "தூ" என்று துப்புவோம் ...
நிஜத்தில் குடியை வாழ்த்துவோம் ...
எங்கள் வாழ்க்கை கப்பலை
தரை தட்டி நிறுத்த விட்டு
முன்னேற்ற பாதையில் முத்தெடுக்க
அழைக்கிறார்கள் ...
குடியும் குடித்தனமுமாக வாழ
எங்களுக்கு பழக்கமாகிவிட்டது ...
வருத்தபடாதீர்கள் ...வாழ்ந்து காட்டுகிறோம் ....
இளைஞர்களின் பெருமைக்குரியவர் யார்
அப்துல் கலாமா?
விவேகானந்தரா?
நண்பர்களே எனது சகோதரனுடைய திருமணத்திறகு எளிய வடிவில் (கவிதை வடிவில்)தமிழில் அழைப்பிதழ் தேவை.
உண்மையிலேயே மது விலக்கை கடைபிடித்தால் ஏற்படும் வருமான இழப்புக்கு நியாயமான தீர்வை அரசுக்கு கூறுங்களேன்?
பிறந்தால் குடி இறந்தால் குடி
வென்றால் குடி தோற்றால் குடி
இன்பத்திற்கு குடி துன்பத்திற்கு குடி
விழித்திருக்க குடி தூங்குவதற்கு குடி
குடியில் திளைக்கும் குடி மகனே
குடியின் பயனை கேள் மகனே
மதியினை மழுங்கச் செய்யும்
மனதினை குழப்பம் செய்யும்
நாவினை குளறச் செய்யும்
நாற்றமே எடுக்கச் செய்யும்
கண்களை மறைக்கச் செய்யும்
காமமும் மீறச் செய்யும்
களவுகள் செய்யச் சொல்லும்
கொலைகளும் செய்யத் தூண்டும்
சாலையில் வேகம் கூட்டி
சாவையும் தேடச் சொல்லும்
சந்தேகம் விதைதுப் போகும்
சந்தோஷம் புதைத்து போகும்
தன்னையே தாழச் செய்து
தற்கொலைச் செய்யத் தூண்டும்
சொந்தங்கள் தூரம் ஓடும்
சோகங்கள
பிறந்தால் குடி இறந்தால் குடி
வென்றால் குடி தோற்றால் குடி
இன்பத்திற்கு குடி துன்பத்திற்கு குடி
விழித்திருக்க குடி தூங்குவதற்கு குடி
குடியில் திளைக்கும் குடி மகனே
குடியின் பயனை கேள் மகனே
மதியினை மழுங்கச் செய்யும்
மனதினை குழப்பம் செய்யும்
நாவினை குளறச் செய்யும்
நாற்றமே எடுக்கச் செய்யும்
கண்களை மறைக்கச் செய்யும்
காமமும் மீறச் செய்யும்
களவுகள் செய்யச் சொல்லும்
கொலைகளும் செய்யத் தூண்டும்
சாலையில் வேகம் கூட்டி
சாவையும் தேடச் சொல்லும்
சந்தேகம் விதைதுப் போகும்
சந்தோஷம் புதைத்து போகும்
தன்னையே தாழச் செய்து
தற்கொலைச் செய்யத் தூண்டும்
சொந்தங்கள் தூரம் ஓடும்
சோகங்கள
அன்பிற்கினியவரே ...
ஆருயிர்த்தோழரே...
இன்முகத்தோடும்
ஈகை குணத்தோடும் பழகும்
உயர்ந்தோனே ...
ஊருக்கு உழைத்த
எளியோனே...
ஏனிந்த அவசரம் ...
ஐயத்தை போக்கிய காவலனே ,
ஒருமையாய் உணர்கிறேன்
ஓங்காரமிட்டு அழுகின்றேன் ...
ஒளவை மொழி பேச நீ
எப்பொழுது வருவாய் ?
மறு பிறவி ஒன்று இருந்தால்
நீ எனக்கு மகனாக பிறக்கவேண்டும்
ஏனென்றால் , இந்தபிறவியில் நான்
உனக்கு மகளாக பிறந்துள்ளேன் அல்லவா ...
ஆண்டவனுக்கு ஏது ஆத்மா ...நீ சாந்தி
அடைந்தாலும் நாங்கள் சாந்தி அடைவது எப்போது ?
உலோக பானைகள் எல்லாம்
உருண்டோடி வந்ததனால்
மண் பானை பாத்திரம்
மறைந்த காலம் போய் ...
மறுபடியும் உன் உதவி மக்களுக்கு
வேண்டும் என மண்ணிடம் கேட்ட போது,
புதியதை பார்த்ததும் பழையதை மறந்த மானுடா !
உன் உடம்பு மட்டும் கெடவில்லை
என் உயிர்துளியும் நீங்கள்
இட்ட உரத்தால் இறந்து வெகு நாட்கள் ஆனதடா !!!
நல்லதை மட்டுமே கொடுத்து பழகிய எனக்கு
உங்களைபோல் கெட்டதை கொடுக்க
மனமும் இல்லை
மண்ணில் வளமும் இல்லை....
மறவாது இருக்கவே
மறந்து போனேனே
பிறவாது இருக்கவே
பிரிந்து போனேனே
உறவாது இருக்கவே
ஊர்விட்டு சென்றேனே
மகிழாது இருக்கவே
மரத்து போனேனே
பழகாது இருக்கவே
பறந்து போனேனே
துகிலாது இருக்கவே
துண்டோடு போனேனே
இருந்தாலும் என் வாழ்வில்
இறவாத வரம் வேண்டும் ....
எழுத்து . காம்..அன்பர்கள் அனவருக்கும்..எனது முத்தான காலை வணக்கம்.
இந்த கேள்வி பகுதியிலே.. பட்டி மன்றம் நடத்தலாம் என்ற எண்ணம் என்னுள் இருந்தது. ஆகவே நானாகவே ஒரு தலைப்பை வைத்து அதாவது.. இன்றைய கால கட்டத்தில் காதல் செய்வதில் கை தேர்தவர்கள் ஆண்களா ?? இல்லை பெண்களா?? உங்கள் கருத்துகளை இங்கே அர்ங்கேற்றலாமே...யாரையும் புண்படுபடி எழுதாமல்..கருத்துகளை புரிந்து கொள்ளும் படி எழுதினால் கருத்து பரிமாற்றம் மற்றும் நமது அறிவு பரிமாற்றமும்..இங்கே அழகாய் படம் பிடித்து காட்டலாம்...
ஆரம்பிக்கிறேன் நான்..என்கருத்துகளை...
எனது அருமை எழுத்து.காம் நண்பர்களே..இந்த பட்டி மன்றத்தில் உங்கள் அனைவரையும் சந்
குருத்தாக இருந்த நான்
இதழ் விரிந்து பூத்த போது
கருத்து சொல்ல கூப்பிட்டார்கள் .....
கருத்தோடு கலகலப்பும்
என் கூடவே இருந்தது ....
கருத்த மேகம் பொழியும் நிலையில்
இந்த கானக்குயில் கவிபாடும் வேளையில்
ஒரு ஊனகழுகு வந்து
என்னை உருத்தெரியாமல்
ஆக்கிவிட்டதம்மா ....
கருத்தம்மா மாதிரி கருவில் அழிந்திரிக்கலாம் ...
இன்று கற்பு இழந்த கண்ணகியாய்
கட்சி பிழையோடு காண்பவர்கள்
பேசக்கண்டேனம்மா.....
மண்ணில் விழுந்த
மழைத்துளியே ...
விண்ணும் மண்ணும்
சண்டையிட்டதால்
நிலமகளை விரிசலுக்குள்
விழ வைத்து விட்டாயே !
நீ எப்பொழுது வருவாய் என்று
கானக்கருக்களில்
கதவைத்திறந்து காத்திருக்கிறோம் ....