விவேகமானவர்
மறவாது இருக்கவே
மறந்து போனேனே
பிறவாது இருக்கவே
பிரிந்து போனேனே
உறவாது இருக்கவே
ஊர்விட்டு சென்றேனே
மகிழாது இருக்கவே
மரத்து போனேனே
பழகாது இருக்கவே
பறந்து போனேனே
துகிலாது இருக்கவே
துண்டோடு போனேனே
இருந்தாலும் என் வாழ்வில்
இறவாத வரம் வேண்டும் ....