நாமார்க்கும் குடியல்லோம்

தானே உழன்று
தானே கற்று அறிந்து
தானே உருவமைத்த
சித்தாந்தங்கள்
தானே உயர்வு பெறும்..

வீணில் ..
புலியொன்றை மோகித்து
வரிபலவும் உடலிலிட்டு
திரிந்திடலால்
பூச்சிகளும்
அஞ்சிடாதே !
உள்ளதெல்லாம்
சாயம்தான்
ஒருநாளில்
விளங்கிடுமே..!

நாம் நாமாக
இருப்பதே நலமென்னும்
எண்ணம் மிக..மிக..
நற்பலனே நானிலத்தில்
மானிடர்க்கு..!

நாமார்க்கும்
குடியல்லோம்..
நல்லதை மட்டும்
கொள்வோம்..
நம்மால்
முடிந்ததை மட்டும்
செய்வோம் !!

எழுதியவர் : கருணா (2-Mar-15, 1:59 pm)
பார்வை : 133

மேலே