உயிர்கொல்லி

உலோக பானைகள் எல்லாம்
உருண்டோடி வந்ததனால்
மண் பானை பாத்திரம்
மறைந்த காலம் போய் ...
மறுபடியும் உன் உதவி மக்களுக்கு
வேண்டும் என மண்ணிடம் கேட்ட போது,
புதியதை பார்த்ததும் பழையதை மறந்த மானுடா !
உன் உடம்பு மட்டும் கெடவில்லை
என் உயிர்துளியும் நீங்கள்
இட்ட உரத்தால் இறந்து வெகு நாட்கள் ஆனதடா !!!
நல்லதை மட்டுமே கொடுத்து பழகிய எனக்கு
உங்களைபோல் கெட்டதை கொடுக்க
மனமும் இல்லை
மண்ணில் வளமும் இல்லை....

எழுதியவர் : paptamil (2-Mar-15, 2:09 pm)
சேர்த்தது : paptamil
Tanglish : uyirkolli
பார்வை : 91

மேலே