paptamil- கருத்துகள்

அறிவால் அறிவியலை வென்றவர் அப்துல் கலாம் ...
விவேகத்தால் விதை ஊன்றியவர் விவேகானந்தர்...
அறிவியலால் உலகை அளந்த நாயகனும் இளைஞர்களின் கனவு நாயகன் ...அப்துல் கலாம் ,
விதையின் எழுச்சியால் வீரமிகு இளைஞர்களின் கதாநாயகன் ... விவேகானந்தர்,
கதாநாயகன் வழியை பின்பற்றி தானே கனவு நாயகன் கனாக்கண்டார் ...

வெற்றிலை பாக்கோடு தாம்பூலம் வைத்து ,
வேறுபட்ட இரு மனங்களையும் இணைத்து ,
வேதங்கள் முழங்கவும் வெற்றிகளை குவிக்கவும் ,
பலகார பண்டங்களை பரிவுடன் பரிமாறிட,
பக்கபலமாக பெற்றவர்கள் நிற்க ,
பல காலங்கள் வாழ்ந்து பண்பாட்டை காக்கவும்
பண்பட்ட மணமக்களை பாசமுடன் வாழ்த்த
உரிமை கொண்டு வாருங்கள் உறவுத் தோழர்களே !!!...
உள்ளன்போடு வரவேற்கின்றோம் ...
உவகை பூத்து காத்திருக்கிறோம் ...

அரசியல்வாதிகள் தேர்தலுக்கு செலவு பண்ணும் பணத்தை கணக்கிட்டாலே போதும் ....

மணி அமரனே !!!
மதுவின் பயன்களை மயிருக்கு
சமமாக மல்லு கட்டி
சுட்டி காட்டியதால் ,நீங்கள்
மானுடம் வாழ மனதினில் பொங்குவதும்
மன்றாடுவதும் மா நிலத்தில் தெரிகிறது ...
ஆணுக்கு பெண் சரி நிகர் சமானம் ஆனால்
பெண்களும் குடித்து கும்மாளம் போட்டால் (தால் )
இந்த மதுவை எதிர்ப்பதும் ஒழிப்பதும் அதிகமாக தெரிகிறது
என்பது என் தாழ்மையான கருத்து....
ஆண் குடித்து ஆடினால் அவமானமில்லை ( குடிகாரனின் மனைவியோ ,தாயோ ,சகோதிரியோ எத்தனை அவமானங்களை சமுதாயத்தில் சந்தித்து இருப்பார்கள் )
பெண் குடித்து ஆடினால் மட்டும் அதையே ஒழிக்க
அத்தனை பேரும் குரல் கொடுக்கிறீர்கள் ...
எந்த விதத்தில் நியாயம் ....

அன்பின் அடைக்கலமான பெண்களை ,அந்த அன்பைகொண்டே அடிமைபடுத்தும் இனம் ஆண்கள் அல்லவா ?( அடிமைபடுத்தும் ஆண்களை மட்டுமே குறிக்கும் ) பெண்களின் அன்பில் சிறிது காமம் இருக்கும் .ஆனால் ஆண்களின் காமத்தில் சிறிது அன்பும் இருக்கும் .

"இந்த 1000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டு என்று சொல்லி குடுத்து விட்டு 1000 ரூபாய் வாங்கி செல்கிறார்"- கொடுத்த 1000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டு இல்லை என்றால் ( அந்த கடைக்காரருக்கு மட்டுமே அது கள்ள நோட்டு, இந்த கடைக்காரருக்கு இல்லைதானே )அவருக்கு நஷ்டம் ஏதுமில்லை . அப்படி இல்லை என்றால் பக்கத்து கடை காரர் வந்து திருப்பி கொடுத்த மாதிரி ,பொருள் வாங்கியவரிடம் இந்த கடைக்காரரும் "நீங்கள் கொடுத்த 1000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டு என்று சொல்லி குடுத்து விட்டு " நல்ல 1000 ரூபாய் நோட்டை திரும்பவும் வாங்கிக்கொள்ளலாம் .அப்படி அவர் வாங்கும் பட்சத்தில் அவருக்கு நஷ்டம் ஏதுமில்லை.

ஆணா ? பெண்ணா ?
காதல் முடிந்து ,அடுத்த கற்பனை
இன்று கல்வியா ?முயற்சியா ?
நன்றாக உள்ளது நல்வரவு !
முடியாத வாக்குவாதத்திற்கு
முடிவையும் கொடுத்து
முயற்சி செய்யுங்கள் என்று
சொல்லிய விதம் நன்று !
கல்வியானது அறிவுப்பசியை
தூண்டுவது ,துரத்துவது ...
முயற்சி வாழ்க்கைக்கு தேவையான
உத்திகளையும் உத்வேகத்தையும்
வெற்றிப்படிகளாக மாற்றி தருவது ...

வந்தனம் . ஒவ்வொரு மனிதற்குள்ளேயும் எல்லா உணர்வுகளும் உண்டு .அப்படித்தான் காதல் உணர்வும் .ஊமை விழியை பேசும் விழி ஏன் பின்தொடரவேண்டும் . காதலுக்கு கண்ணே இல்லை என்று சொல்லுகிறார்கள் .

தலைவா வணக்கம் . பட்டிமன்றத்தில் தலைப்பை கொடுக்கும் பொழுதே முடிவையும் நீங்களே தீர்மானித்துள்ளீர் என்று தெரிகிறது . பின்னே எதற்கு வாதம் ? ஒரு ஆணை ஒரு பெண்ணோ அல்லது ஒரு பெண்ணை ஒரு ஆணோ காதலிப்பது என்பது இயற்கையின் நியதி . பார்வையின் பரிமாற்றங்கள் இருவரின் இதயக்கண்கள் சம்மந்தபட்டது தானே ! அதற்கு ஏன் பெண்ணை மட்டும் குறிப்பிட்டு கூறுகிறீர் ? புரியவில்லை !....

graphic designer என்றால் "அசையும் படங்களை வடிவமைப்பு செய்பவர் "

"இது போல் சுற்றி திரியும் சில பெண்களுக்கு ஜாக்கிரதையாக செயல் படுங்கள் என்பதை மட்டும் உங்களின் முன் வைக்கிறேன்" இந்த வரி பெண்களுக்கு மட்டுமில்லை நண்பா ! முக்கியமாக ஒரு சில ஆண்களுக்குத்தான் இது பொருந்தும் . பெண்களை சுற்றி திரிவது ,பின்னாடி துரத்துவது , இன்னொருத்தி அழகாக கிடைத்தால் கைகழுவிவிடுவது இதை எல்லாம் செய்வது ஒரு சில ஆண்களே என்பது என் கருத்து. "அந்த ஆடவனின் வாழ்கையை சீர் அழிக்கும்...பெண்களை என்ன சொல்லி புரிய வைப்பது..". அந்த ஆடவன் சரியாக இருந்தால் வாழ்க்கை ஏன் சீரழி யப்போகுது ....புரியாத பெண்களை நீ ஏன் நாடவேண்டும் ...

அரசியல் ஒரு சாக்கடை ...அதில் விழுந்து ஒட்டிய சேற்றை மறைக்க தான் வெள்ளை வேட்டி ,சட்டை அணிந்து கொண்டுள்ளோம் . புனிதம் என்ற சொல்லை உச்சரிக்க தகுதி இல்லாத சில தலைவர்களால் அரசியல் நடத்தப்படும்போது எப்படி தூய்மை படுத்த முடியும் ?

அரசியல் ஒரு சாக்கடை ...அதில் விழுந்து ஒட்டிய சேற்றை மறைக்க தான் வெள்ளை வேட்டி ,சட்டை அணிந்து கொண்டுள்ளோம் . புனிதம் என்ற சொல்லை உச்சரிக்க தகுதி இல்லாத சில தலைவர்களால் அரசியல் நடத்தப்படும்போது எப்படி தூய்மை படுத்த முடியும் ?


paptamil கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே