மதுவின் பயன்கள்
பிறந்தால் குடி இறந்தால் குடி
வென்றால் குடி தோற்றால் குடி
இன்பத்திற்கு குடி துன்பத்திற்கு குடி
விழித்திருக்க குடி தூங்குவதற்கு குடி
குடியில் திளைக்கும் குடி மகனே
குடியின் பயனை கேள் மகனே
மதியினை மழுங்கச் செய்யும்
மனதினை குழப்பம் செய்யும்
நாவினை குளறச் செய்யும்
நாற்றமே எடுக்கச் செய்யும்
கண்களை மறைக்கச் செய்யும்
காமமும் மீறச் செய்யும்
களவுகள் செய்யச் சொல்லும்
கொலைகளும் செய்யத் தூண்டும்
சாலையில் வேகம் கூட்டி
சாவையும் தேடச் சொல்லும்
சந்தேகம் விதைதுப் போகும்
சந்தோஷம் புதைத்து போகும்
தன்னையே தாழச் செய்து
தற்கொலைச் செய்யத் தூண்டும்
சொந்தங்கள் தூரம் ஓடும்
சோகங்கள் கைகள் சேரும்
வேலைகள் இழக்கச் செய்யும்
வெட்டியாய் திரியச் செய்யும்
நோய்களைத் தேடிச் செல்லும்
நொடியினில் வீழச் செய்யும்
மதுவின் பித்தோ தலைக்கேறும்
மரணமோ உனது சொத்தாகும்
எத்தனை எத்தனை பயன்களடா
என்னால் சொல்லி முடியலடா
இதனைச் சொல்ல இவன் யாரடா
என்றே கேட்கலாம் குடிமகன் நீயடா
மதுவில் திளைத்திட்ட மூடா-நீயென்
மடியின் மயிருக்குச் சமம்தான் போடா