தூத்துக்குடி

கடல் அன்னை கண்டெடுத்த
முத்து குவியலே ...
அலை அடிக்கும் காற்றினில் வீசும்
அசைவ வாடையே ...
கப்பலில் மட்டும் தான்
சரக்கு பரிமாற்றமா ?...
என் மக்களும் சரக்கை
தினமும் பரிமாறி கொள்கிறார்கள் ...
ஊருக்கெல்லாம் உப்பிட்டு வளர்க்கும் தாயே
உன்னை நீயே வதைத்து கொள்ளுகிறாயே ...
ஊரின் பெயரில் மட்டும் தான்
"குடி" க்கு "தூ" என்று துப்புவோம் ...
நிஜத்தில் குடியை வாழ்த்துவோம் ...
எங்கள் வாழ்க்கை கப்பலை
தரை தட்டி நிறுத்த விட்டு
முன்னேற்ற பாதையில் முத்தெடுக்க
அழைக்கிறார்கள் ...
குடியும் குடித்தனமுமாக வாழ
எங்களுக்கு பழக்கமாகிவிட்டது ...
வருத்தபடாதீர்கள் ...வாழ்ந்து காட்டுகிறோம் ....

எழுதியவர் : paptamil (19-Nov-15, 2:46 pm)
பார்வை : 295

மேலே