காதல்தேவதை சுயசரிதை எழுதுகிறாள்
![](https://eluthu.com/images/loading.gif)
நான்
அழகு தேவதையின்
அன்புத் தங்கை
*
எல்லா
தேவ தேவதைகளின்
பொறாமைக்கு
ஆளானவள் நான்
ஏனெனிலோ
எனக்கு மட்டும்
நாத்திகர்களே
கிடையாது
எல்லோரும்
பக்தர்களே
*
எல்லோரும்
பக்தர்கள் எனில்
காதல் தோல்விகளின்
காரணம் என்ன
என்கிறீர்களா?
உண்மையில்
உண்மையில்
காதலுக்கு அவர்கள்
எதிரிகள் அல்ல
சாதியின் கருப்பு நிறமோ
மதமெனும் மாயையோ
வர்க்கங்களின் வேறுபாடோ
பணத்தின் பகட்டோ
அவர்களின் கண்ணைக்
கட்டிவிடுகிறது
*
ஏ மானிடர்களே ..
சொர்க்கம் என்பது
வேறில்லை
என் சந்நிதிதான்
என் சந்நிதிதான்
சொர்க்கத்தின் கதவுகள்
திறந்தே இருக்கும்
உங்கள்
மனக்கதவுகள்தான்...
*
என்
பன்னீர் வரத்திற்காக
இங்கே
எத்தனை எத்தனை
கண்ணீர்த் தவங்கள் ?
காதலின் தூய்மையான
கண்ணீரில்
பூமியின் ஆன்மா
கழுவப்படட்டும்
இன்னும் பல
யுகங்களுக்குப் பிறகு
உலகம் அழியும் எனில்
இந்த மண்ணில்
கடைசியாய் முளைக்கப்போகும்
குழந்தையே ...
எப்போதோ
வறண்டிருக்க வேண்டிய
பூமியை
ஈரம் உலராமல் காத்து
உன்னிடம் தருவேன்
நான்... ! (1992)
("காதலின் பொன்வீதியில் " நூலிலிருந்து )