துவைப்பாய் துணியை
பரிதிமுகங் காட்டிவிட்டான் பங்கயமே பூப்பாய்
சிரித்தவண்ணம் நீயுஞ் சிவந்து .
சிவந்திருந்த வானம் தெளிந்து வெளுக்கத்
துவைப்பாய் துணியைத் துணிந்து .
துணிந்து மழையில் சொகுசாய் நனைந்தால்
பிணியில் உழல்வாய் பிறகு .
பிறகுபார்ப் போமென்றே பின்வாங்க, வாழ்வும்
சிறக்குமோ சொல்வாய் தெளிந்து .
தெளிந்த அறிவினால் சீர்செய்ய, உள்ளக்
களிப்பு மிகுந்திடக் காண் .