மழையும் மாயையும் - சிஎம் ஜேசு

உயிரை இழந்தோம்
உடமைகள் இழந்தோம்

இடங்கள் இழந்தோம்
இன்பங்கள் இழந்தோம்

சாலைகள் இழந்தோம்
சாக்கடையில் நனைந்தோம்

கடமைகள் நினைந்தோம்
முடியாமல் வதைந்தோம்

ஈரங்கள் சூழ்ந்ததால்
வெப்பத்தை இழந்தோம்

பொழுதுகள் தெரியாமல்
புலம்பிதான் இருந்தோம்

சோர்வுக்குள் புதைந்து நாம்
சுறுசுறுப்பை மறந்தோம்

மழையின் மாயைகள்
கண்டுதான் தெளிந்தோம்

பள்ளங்களைக் கண்டுக்கொண்டோம் - இனி
உள்ளங்களை இதமாக்குவோம்

எழுதியவர் : சி.எம்.ஜேசு (19-Nov-15, 12:17 pm)
பார்வை : 76

மேலே