காலத்தை வென்றவர்

அன்பிற்கினியவரே ...
ஆருயிர்த்தோழரே...
இன்முகத்தோடும்
ஈகை குணத்தோடும் பழகும்
உயர்ந்தோனே ...
ஊருக்கு உழைத்த
எளியோனே...
ஏனிந்த அவசரம் ...
ஐயத்தை போக்கிய காவலனே ,
ஒருமையாய் உணர்கிறேன்
ஓங்காரமிட்டு அழுகின்றேன் ...
ஒளவை மொழி பேச நீ
எப்பொழுது வருவாய் ?

மறு பிறவி ஒன்று இருந்தால்
நீ எனக்கு மகனாக பிறக்கவேண்டும்
ஏனென்றால் , இந்தபிறவியில் நான்
உனக்கு மகளாக பிறந்துள்ளேன் அல்லவா ...
ஆண்டவனுக்கு ஏது ஆத்மா ...நீ சாந்தி
அடைந்தாலும் நாங்கள் சாந்தி அடைவது எப்போது ?

எழுதியவர் : paptamil (5-Aug-15, 8:50 am)
சேர்த்தது : paptamil
பார்வை : 98

மேலே