வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன்- கருத்துகள்

நல்ல கருத்து, நல்ல வெண்பா
வாழ்த்துக்கள்.நண்பரே சக்கரை வாசன்

ஆஹா.....ஸ்பரிசம் முத்திரையில் வெகு நாட்களுக்கு பிறகு
படித்து ரசித்தேன் ஓர் கருத்துள்ள புது கவிதை...

" காயமே இது பொய்யடா,,,,வெறும் kaatradaithap பையடா " என்றார்
அதுபோல இந்த மாயையும்....இருப்பதுபோல் தோன்றும்
இல்லாமையே....நீலவானம்.....காண முடிகிறது...ஆனால் எது வானம்
யாரறிவார்...கானல்....காணமுடிகிறது....வெறும் நிழலே..."

இன்னும் எழுதுங்கள் நண்பரே எமக்காக...

அருமை.....நண்பரே கவின் சாரலன்
'மானல்லவோ கண்கள் தந்தது....' கண்ணதாசன் பாடல்
நினைவுக்கு வந்தது...

காதலனை உள்ளதால் காதலிப்பவன்
தாலியைக் அவனென்றே காதலிப்பாள்
ஆம் அது காவல் வேலியம்தான்

நன்றி பாளை பாண்டி

அவள் அழகை சொல்லும் கவிதையும் அழகே
திரை உலகிற்கு கவிதைப் புனையலாமோ ?
உயர்ச்சித்தீரா > இல்லையேல் முயன்று பாருங்கள் விரும்பினால்

நான் மிக ரசித்தேன் ......வாழ்த்துக்கள்

'வாணீசன் நற்றுணை யுங்கொண்டால் வாழ்வு மதிசயமே'.....நான் ரசித்த உண்மைபேசும் இறுதி அடி
உண்மைக்கு கவிதை நண்பரே டாக்டர் ஐயா கன்னியப்பன்

உருக்கமான மஹாகவியின் முதல் அடியில் சில எடுத்து
தொடர்ந்து அழகு தமிழில் வார்த்த எழில் செய்யுள்
பொன்மலைத் தூவுதே .......

அருமை.....நண்பரே கவின் சாரலன் ....vaalthukkal

ஆம் நண்பரே......இத்தகைய நம்பிக்கைகள் இன்னும் சில கிரமாய் பகுதிகளில் நம் தமிழ்நாட்டில் நிலவி வருகிறது.....கேட்க கேட்க சுவைத்தான்....தவிக்கும் கிடைத்த புது எண்ணங்கள் இவற்றில் வளர...
நன்றி நண்பரே....ஆழ்ந்த கருத்திற்கு

அதனால்தானோ...'மௌன ராகம்' படம் எடுத்தாரா !!!
தடாகத்தில் மொட்டாய் இருந்து சூரியனின் கதிர்கள்
பட்டு மலரும் மாமலர் தாமரை....மொட்டாய் வந்து
மாமலரை மலர்வது...மௌனத்தில்...அங்கு ஏது ஓசை
ஆனால் அந்த மௌனத்தில் எழுகிறது ஒரு ராகம்....இயற்கையின் முனை ராகம்
அதுபோல் பெண்ணின் மௌனம்...

நல்ல கற்பனை நண்பரே கவின் சாரலன்

"கட்டோடு குழலாட ஆட
கண்ணென்ற மீன் ஆட ஆட" என்ற கவிஞரின் பாடல் நினைவுக்கு வந்தது

வெளுத்து வாங்கிவிட்டீர் கவின் சாரலன் ....அசாத்திய சொல்லாடல் ...congrats

நன்றி நண்பரே டாக்டர் கன்னியப்பன் ஐயா,......
தானாகவே அமைந்த இன்னிசை வெண்பா...
ராமன் அருள்....உங்கள் உந்துதல்...

நண்பரே..... மீண்டும் ஒருமுறை எழுதியதை சரிபார்க்கவும்
வெண்பா இலக்கத்தோடு ஒப்பிடுக
மா முன் நிரை...விளமுன் நேர் இருந்தே தீரவேண்டும்... முதலடி முதல் சீர்....நிரை...நேர்...புளிமா...முன் நிரை
வரவேண்டும்.....இப்படி பல இடத்தில்....சரி செய்து...மீண்டும் சமர்பியுங்களேன்

இப்படி அந்தகாலத்தை நினைவுபடுத்த சில
குக்கிராமங்கள் இருக்கும் என்றுதான் நானும் நினைக்கின்றேன்
நண்பரே......நல்ல கருத்துள்ள படைப்பு,,,,,,
பொங்கல் வாழ்த்துக்கள்

மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் தங்கள் வருகையில் நண்பரே
பொறுப்பான நல்ல கருத்திற்கும் மிக்க நன்றி கவிஞரே கவின் சாரலன்

மிக்க நன்றி நண்பரே கவி கவின் சாரலன்
இதோ இங்கே ஒரு தேவாரம் பாடல் தரவு கொச்சி கலிப்பாவில் அமைந்ததை கொடுத்துள்ளேன் ....
" தோலுந் துகிலும் குலையும் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையுமுடைத் தொன்மைக்
கொஞ்சும் நோக்கி குளிர்ந்தூதாய் கோத்தும்பீ "

மேற்கண்ட தரவு கொச்சகக் கலிப்பாவில் காய்ச்சீரும் மாச்சீரும், விளச்சீரும்,விரவி இருப்பதைக் காணலாம்; மாசீர் முன் நிரைச்சீரே வருவதும் காணலாம்; "பா" வும் விரவி இருப்பதைக் காணலாம் ....

தங்கள் வருகைக்கும் விளக்கத்திற்கும் மிக்க நன்றி பண்டிதரே

இப்படியும் கவிதை சரிதான்....அழகுதான் நண்பரே
இனிய போகி பண்டிகை வாழ்த்துக்கள்


வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே