தாலி ஏன்
தாலி எதற்கென்று கேட்கும் இன்றைய இளைய சமுதாயம்
மண மேடையில் கைவிரலில் மோதிரம் போடுவதில்
பூரித்துப்போகின்றார் ஏன் அதை கணவன் தனக்களிக்கும்
காதல் சின்னம் மற்றும் பாதுகாப்பு என்றே எண்ணி
இளைய கன்னிகள் தாலியும் இம்மோதிரம் போலத்தான்
காதல் சின்னம் கணவனின் ரட்சை என்றறிந்து கொள்ளுங்கள்
தாலி கட்டிக்கொள்ள என்று வேடம் சொல்லவில்லை
இது இடையில் வந்த லௌகீகம்தான் ஆனால் கருத்துடைய சடங்கு
நல்லதென்று எத்தனையோ மேலைநாட்டு வழக்கங்களை
ஏற்றுக்கொள்ளும் இளைய சமுதாயமே அர்த்தமுள்ள
நம்நாட்டு பண்பையும் கலாச்சாரத்தையும் உதாசீனம் செய்யாதீர்