அற்புதமான காதல் கவிதை
💘💘💘💘💘💘💘💘💘💘💘
*நீ எங்கே.....?*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
💘💘💘💘💘💘💘💘💘💘💘
என் காதல் தேவதையே!
என் காதல் தேவதையே!
நீ இருப்பது எங்கே ?
உன்னைக் காண -நானும்
துடியாய் துடிக்கிறேன் இங்கே !
உன் முகம்
எப்படி இருக்கும் என்று
வரைந்து வரைந்து பார்த்ததில்
நான் ஓவியன் ஆனேனே.....
உன் அழகு
எப்படி இருக்கும் என்று
எழுதி எழுதி பார்த்ததில்
நான் கவிஞன் ஆனேனே ....
எந்த திசையில்
நீ இருப்பாய் என்று
தெரியாது என்பதால்
எல்லாத் திசையையும்
நேசிக்கிறேன்..... !
எப்போது என் கண்ணில்
படுவாய் என்று
எல்லா நேரமும்
யோசிக்கிறேன்......!
என்னை தாங்கும்
மஞ்சம் போலே
உன் மடியில் என்று
என்னைத் தாங்குவாயோ....?
தொட்டிலில் தூங்கும்
குழந்தை போலே !
என் தோளில் தூங்குவதற்கு
நீ என்று வருவாயோ ......?
கடலும் நதியும் போலே
நாம் இருவரும்
கலந்திட வேண்டும்.....
உயிரும் உடலும் போலே
நாம் வாழ்ந்திட வேண்டும்.....
காதலிக்காக
காத்திருப்பவர்கள்
நானோ
காதலுக்காக
காத்திருக்கிறேன்....
இதயத்தைத் தொலைத்து
காதலியை
எதிர்பார்த்திருப்பார்கள்...
நானோ
இதயத்தைத் தொலைக்க
எதிர்பார்த்திருக்கிறேன்....
உன்னை நான்
பார்க்கும் வரையில்
கண்ணிருந்தும்
குருடன் நானே......!
உன்னை நான்
சேரும் வரையில்
சிலை இல்லாத
கோவில் நானே.......!
என் காதல் தேவதையே !
என் காதல் தேவதையே !
நீ இருப்பது எங்கே
உன்னைக் காண - நானும்
தவியாய் தவிக்கிறேன் இங்கே...!
*கவிதை ரசிகன்*
💘💘💘💘💘💘💘💘💘💘💘