வயலோடை மீன்கள் விழியினில் ஆட

வயலோடை மீன்கள் விழியினில் ஆட
வயல்வரப்பில் வாளிப்பாய் வஞ்சி நடக்க
கயல்நீந்தா மல்கண்கள் கொட்டாது பார்க்க
கயல்விழி யாள்சிரித் தாள்

---- ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

மாற்றிவெட்ட ஓடையை நானுமிவ ளைப்பார்த்து
மாற்றான் வயல்போன நீர்

---ஒரு விகற்பக் குறள் வெண்பா

பார்த்துப்பார்த் துச்சிரித்தாள் பாவை எழில்கயலி
நாத்துநட்டோ ரும்சிரித் தார்

---ஒரு விகற்பக் குறள் வெண்பா
பார்த்து ஆசிடை எதுகை நாத்து க்கு

எழுதியவர் : கவின் சாரலன் (26-Aug-24, 9:32 am)
பார்வை : 66

மேலே