நன்றி

யுடைவர்க்கு நாயா யிருந்துவிடு
அன்றியு மன்பா யிரு
*
நன்றிகொன்று நாய்வளர்க்கும் நானிலத்தில் நன்றியுளார்
ஒன்றிரண் டிங்குமங்கு முண்டு
*
இங்குமங்கு மெங்குமின்றித் தொங்குநன்றி மங்கிநின்றுத்
தங்குமிட மில்லாத தாச்சு
*
பங்குபோட்டுப் பங்குபோட்டுப் பாதிப்பா தின்றகு
ரங்குகதைக் கொப்பநன்றி யாச்சு
*
தங்கமான வர்களில் தங்கிநின்ற நன்றியும்
பங்கமாச்சு தின்றிலே பார்
*
நன்றியெனும் வாக்குரைக்கும் நாவுடைய நல்லவர்க்கு
நன்றிக் கடன்படல் நன்று
*
நன்றியெனும் செல்வம் நலமாய் வழங்குவதில்
முன்நிற்க வேண்டு முவந்து
*
சொல்லுமன்பு நன்றியுன் சொத்தை அழிப்பதில்லை
சொல்லிப்பார் அஃதோர் சுகம்
*
நன்றிகெட்ட நாயென்று நானிலத்தி லேதுமில்லை
நாலுமாட்டும் வால்பார்த்து நம்பு
*
வால்பிடித்து வாழ்வதென வந்துவிட்டால் நன்றியொடு
நாய்வாலை நீபிடித்து வாழ்
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (26-Aug-24, 1:38 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 61

மேலே